#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, September 27, 2010

ராஜராஜ சோழனை உலக சரித்திரம் அங்கீகரிக்கவில்லை: தஞ்சை விழாவில் ஆ.இராசா பேச்சு

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாட அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஆ.ராசா, சரித்திரம் படைத்த தமிழருக்கு அஞ்சல் தலை வெளியிடும் மரபில் ராஜராஜசோழனை நினைவு கூர்ந்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விழாவில் எனக்கு முன்பு பேசியவர்கள் அனைவரும் மண்னன் ராஜராஜனின் பெருமைகளை பேசி, அவற்றோடு தலைவர் கலைஞரை ஒப்பிட்டார்கள். ராஜராஜன் பல சாதனைகளை படைத்த போதிலும், உலக சரித்திரம் அவரை அங்கீகரிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கணக்கு பார்க்கும் நாள் அல்லது கணக்கு தீர்க்கும் நாள் என்ற ஒன்று உள்ளதென்று அண்ணாவை படித்தவர்களுக்கும், பெரியாரை படித்தவர்களுக்கும் நன்றாக தெரியும். அதன்படி இன்று கணக்கு தீர்க்கும் நாள். 1956 ஆம் ஆண்டிலே நடந்த அரசியல் மாநாடொன்றில், தலைவர் கலைஞர் தனது 30-ஆவது வயதில் திராவிடத்தின் உலகத் தொடர்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், தமிழன் சிங்களத்தை வென்றான்; சோழ தேசம் என்று சொல்லவைத்தான். உலக சரித்திரத்தில் நாகரீகம் கொடி கட்டி பறந்திட்ட தமிழர்கள் இன்று அதை இழந்து தவிக்கிறோம். இழந்த பண்பாட்டை , செங்கோலை மீண்டும் பிடிப்போம் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். பின்பு ஆட்சியில் அமர்வோம் என்பதை அறியாத வயதில் அது பற்றி தலைவர் கலைஞர் பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கவியரங்கம் ஒன்றில், சோழன் அழைக்கிறேன் வா; சோழ நில கவிஞனே வா என்று தலைவர் கலைஞர் குறிப்பிட்டார். ஆவணப்படுத்துதல், பல்கலைகள் அமைத்தல் ஆகியவை ராஜராஜனுக்கு சொந்தம் அவை கலைஞருக்கும் சொந்தம். கணக்கு தீக்கும் நாள் ஒன்று இனி உண்டு என்றும் தெரிவித்தார்.

Read more...

(வீடியோ) தஞ்சை பெரிய கோவில் அஞ்சல் தலை: அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார்

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பெரியகோவில் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் மத்திய தொலைத் தொடபு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டார். அதை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்
ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியின் வீடியோவை காணுங்கள்.




Read more...

Sunday, September 19, 2010

வீடியோ காட்சி : ”இலவச செல்போன் திட்டம்”

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி உரையாற்றினார்.

அந்த விழாவின் விடியோ காட்சிகளை காண தருகிறோம்







Read more...

அனைத்து கிராமங்களிலும் ‘பிராட் பேண்ட்’ வசதி: அமைச்சர் ஆ.ராசா தகவல்

இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இன்னும் இரு ஆண்டுகளில் "பிராட் பேண்ட்" இணைப்பு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா,“. நான் 2007ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்கும் போது 30 கோடியாக இருந்த இணைப்பு, தற்போது 70 கோடியாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி 8லிருந்து 28 சதவீதமாகவும். நாட்டில் ஒட்டு மொத்தமாக 23லிருந்து 59 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது” என்றார்.

அடுத்த இரு ஆண்டுகளில் உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணம் வெறும் 10 பைசாவாக குறையும். கடந்த மூன்றாண்டில் பல்வேறு வகையிலும் தொலைத்தொடர்புத் துறை ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள ஆறு இலட்சம் கிராமங்களில் 5.90 இலட்சம் கிராமங்கள் முழுவதும் தரைத் தொடர்பு வழியுடன் இணைத்துள்ள ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல். மட்டுமே ஆகும். சமீபத்தில் காஷ்மீரில் பெய்த அடைமழையின் காரமாக 'லே' என்ற நகரமே அழிவில் சிக்கியது. அப்போது அங்கு பல வகையில் உதவி செய்தது பி.எஸ்.என்.எல். தான் என்பது அப்பகுதி மக்களே கூறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

”மத்திய தொலைத்தொடர்பு துறையின் விதிமுறைகளை தளர்த்தியதன் பயனாக தனியார் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 5 சதவீதத்தை கிராமப்புற தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற விதி அமுல்படுத்தப்பட்டதால், தற்போது 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சேமிப்பாக உள்ளது. இதன் மூலம் அடுத்த இரு ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) மூலம் இணைக்கப்பட்டு “பிராட் பேண்ட்” சேவை வழங்கப்படும். தற்போது அவினாசியில் முன்னோடி, சோதனை திட்டமாக வழங்கப்பட்டுள்ள இலவச மொபைல் போன் திட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்” என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

Read more...

Friday, September 17, 2010

ஊட்டியில் தி.மு.க. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது

தி.மு.. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை ஊட்டியில் உள்ள மோனார்க் ஹோட்டலில் 16-ஆம் தேதி தொடங்கியது. தி.மு. கழகத்தின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளரும், மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சருமான ஆ.ராசா வரவேற்புரையாற்றினார்.

தொடக்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்த பயிற்சி முகாம் திமுகவின் கொள்கைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் மிக எளிதாக சேர்க்க வேண்டும் எனபதே இந்த முகாமின் குறிக்கோள். பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை எல்லோரும் இணைந்து மென்மேலும் வளர்க்க வேண்டும். திமுகவின் வரலாறுகளையும், கழகத்தினுடைய தியாகங்களையும் மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும்” என்றார்.

திராவிட இயக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி திராவிட இயக்க பார்வை ஆகிய தலைப்புகளில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன், கோவை மு.ராமநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் நெடுஞ்செழியன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

Read more...

Sunday, September 12, 2010

(வீடியோ) ஊட்டியில் ரோப் கார் அமைக்க அமைச்சர் ஆ.ராசா ஆய்வு


நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோப் கார் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் உதகை படகு இல்லத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரோப் கார் அமைக்க நீலகிரியில் 9 இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.




Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO