#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Saturday, December 26, 2009

சத்திய மங்கலத்தில் சார்பு நீதிமன்றம் - அமைச்சர் ஆ.ராசாவுக்கு நன்றி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க பொதுமக்கள் தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நீலகிரி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, மக்களின் கோரிக்கை குறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக பரிந்துரை செய்தார். இப்போது சத்தியமங்கலத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தமிழாக முதல்வர் கலைஞ்சர் மு.கருணாநிதி, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், நடுவண் அமைச்சர் ஆ.ராசா ஆகியோருக்கு ஈரோடு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் என்.கே.கே.பெரியசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் எல்.பி.தருமலிங்கம், ஊ.சுப்பிரமணியம் ஆகியோர் அப்பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

  ©Template by Dicas Blogger.

TOPO