இந்துத்துவாவின் குணாம்சங்கள் என்னென்ன செய்யும்? - அமைச்சர் ஆ.இராசா பேச்சு
இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே, இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல்கூறு, சமூகத்தை ஏற்றத்தாழ்வுள்ள படைப்புகளாக மாற்றுவது. Gradual graded inequality – the first character of the Hinduism, இந்துயிசத்தினுடைய தத்துவம் என்று அம்பேத்கர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். Graded inequality வேற்றுமையைக் கூட ரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. Horizontal division வேறு Vertical division வேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.
Horizontal division என்று சொன்னால், கிடைநிலையில் பாகுபடுத்திக்கொண்டே போவது இதிலே ஒரு கட்டையை எடுத்துவிட்டு இன்னொரு கட்டைக்குத் தாவலாம். ஆனால் ஏணிப்படியைப் போல vertical ஆக வைத்தால் ஒரு படியை விட்டு இன்னொரு படிக்குப் போகமுடியாது. இந்தியாவில் ஜாதி எப்படி இருக்கிறது என்றால் படிக்கட்டைப் போல இருக்கிறது. Vertical division - vertical ஆக இருக்கிற காரணத்தினாலேதான் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியை தாண்டமுடியாமல் போகிறது என்கிற ஆய்வினை அம்பேத்கர் வைக்கிறார். அதைத் தந்தை பெரியாரும் ஒப்புக்கொண்டு, ஜாதியை நாம் எடுக்கவேண்டுமென்று சொன்னால் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தைக் காப்பாற்றுகின்ற கடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார். இந்த இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.
அம்பேத்கர் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதனால் தான் பெரியாரை நான் கவனமாகச் சொன்னேன், பெரியாரை நாம் நாத்திகனாகப் பார்ப்பது என்பது வேறு, அந்த நாத்திகத்துக்குள் அவர் சொல்லுவது நான் ஒரு தாராளவாதி என்று அவர் சொல்லுவதற்குக் காரணம், கடவுளை நேரடியாக வெறுக்க வேண்டிய அவசியம், எதிர்க்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு வந்ததற்குக் காரணம் வேறு. பகுத்தறிவு என்பது வேறு. ஆனால் பெரியாருடைய நாத்திகத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகம் சார்ந்த உணர்வும், அம்பேத்கர் உயர்த்திப்பிடித்த ஆன்மீகமும் ஒரு இடத்தில் சந்திக்கிறது. ஜாதி கூடாது, இறப்புக்குப் பிறகு ஒன்றும் கிடையாது.
புத்தரிடத்திலே கேட்டார்கள், இறப்புக்கு, சாவிற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்:
``ஒரு விளக்கு அணைந்ததற்குப் பிறகு அந்த ஒளி எங்கே போகிறது என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்’’. ரொம்ப எளிமையாகச் சொன்னார்.
ஒரு காலகட்டத்தில் அம்பேத்கர் இன்னும் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், வரலாற்று மாணவர்கள் படித்தாக வேண்டும். Who were the sudras? Why they have been called as sudras and termed as fourth varna in Indo-aryan society? சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன் நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள்? என்று ஒரு புத்தகம். ஆய்வுக்கட்டுரை. இன்னொரு புத்தகம். Who were the untouchables? Why they have been called as untouchables? அவர்கள் ஏன் தீண்டத்தகாதவர்களாக அழைக்கப்பட்டார்கள் என்று சொன்னபோது சொல்கிறார், தீண்டாமை ஜாதி எல்லாம் எப்போது வருகிறது என்று சொன்னால், கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு 400 ஆண்டுகளில் அதற்கு முன்பு கிடையாது. பாகியான் வருகிற பொழுது அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். கி.மு.400 வது ஆண்டு பௌத்தத்திற்கும் ஏற்கனவே இருந்த ஆரிய சமூகத்திற்கும் நடந்த மோதலின் வெளிப்பாடுதான் இந்த ஜாதிகளெல்லாம் வருகிறதென்று அங்கே அவர் குறிப்பிட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை வைக்கிறார். அந்த ஆய்வை மறுதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், எங்கே நாம் நிற்கிறோம் என்று சொன்னால் , இந்த நான்கு குணங்கள் இருக்கிறதே, Graded inequality-number one வேறுபாடுகளை ஏற்படுத்தி அந்த வேறுபாடுகளைக் கட்டாயமாக ஆக்குவது. இன்னொன்று, அப்படி வேறுபாடுகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால் பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வியை மறுப்பது. இது ஒரு குணாம்சம். இந்துத்துவாவினுடைய குணாம்சத்தில் இதுவும் ஒன்று. மூன்றாவது, Prohibition of power அவன் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது. 1930இல், 40 இல் எல்லாம் என்ன பண்ண முடியும்?
(தொடரும்...) அடுத்து வருவது
சமஸ்கிருதம் படித்தால்தான் எம்.பி.பி.எஸ். அட்மிஷன்!
0 comments:
Post a Comment