காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாடு நினைவு அஞ்சல்தலை வெளியீடு: அமைச்சர் ஆ.இராசா பங்கேற்பு
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்களின் 20- ஆவது மாநாட்டையொட்டி அஞ்சல் தலை ஒன்றை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் புது தில்லியில் வெளியிட்டார். மக்களவைத் தலைவர் மீரா குமார், மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ இராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
.........................................................................................................................................................................
புதுதில்லி:
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களின் 20-ஆவது மாநாட்டையொட்டி அஞ்சல் தலை ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். இதனை அமைச்சர் ஆ.இராசா வழங்கினார்.
புது தில்லியில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களின் 20-ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி அஞ்சல் தலை ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். அங்கு வெளியிடப்பட்ட இந்த அஞ்சல் தலையை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ இராசா வழங்கினார்.
இந்த மாநாட்டில் இந்திய நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் மீரா குமார் உட்பட காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் அவைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment