ஸ்பெக்ட்ரம் விவகாரம் : தம்பிதுரைக்கு அமைச்சர் ஆ.ராசா பதில்
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ததில் 70 ஆயிரம் கோடி வசூலாகி இருக்கிறது எனவும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை குறைந்த விலைக்கு அனுமதித்ததன் மூலம் அரசுக்கு 1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம் சாட்டினார்.
தம்பிதுரையின் குற்றச்சாட்டை மறுத்து பேசிய மத்திய தொலை தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா, ’’பாஜக ஆட்சி நடைபெற்ற கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்தே 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல முறையில் நடைபெறவில்லை. தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில்தான் ஒதுக்கீடு நடைபெற்றது. டிராய் அமைப்பின் சமீபத்திய பரிந்துரையில்கூட ஏல முறையை பரிந்துரைக்கவில்லை. 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஏல நடைமுறைகள், கடந்த மே மாதம் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது” என்று குறிப்பிட்டார்.
”பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு அதிக பட்ச ஏலத்தொகைக்கு சமமாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்கூட்டியே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி எம்.டி.என்.எல். நிறுவனம் டெல்லி மற்றும் மும்பை 3ஜி சேவையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 463 நகரங்களில் தனது சேவையை தொடங்கி உள்ளது. ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள், தங்கள் சேவையை தொடங்கியதும் 3ஜி சேவை கட்டணமும் குறையத்தொடங்கும். இரண்டு அலைவரிசைகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், 2 ஜி அலைவரிசை குரல் சேவைக்கும், 3ஜி அலைவரிசை வீடியோ மற்றும் புள்ளிவிவர பரிமாற்ற சேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.
1 comments:
டான்சி வழக்கின் தீர்ப்பை போல் ஏழை எளிய மக்களுக்கு தீர்ப்பு கிடைக்குமா? - அரசுக்கு நஸ்டம் ஏற்படுவது பற்றி யார் பேசுவதென்று விவஸ்தை இல்லையா,சும்மா அம்மாவை திருப்தி படுத்துவதற்காக ஏடா கூடமாக கேட்கிறார் அவ்வளவு தான் ஜெயலலிதாவின் நானயமும் தம்பிதுரையின் நானயமும் மக்களுக்கு தெரியாதா?
Post a Comment