சமூகத்துக்கு பயன்படுவதே சிறந்த கல்வி: அமைச்சர் ஆ.இராசா
அப்பலோ கல்வி குழுமத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா சென்னை வாணிமகால் அரங்கில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டார்.
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் பேசியதாவது:
ஒரு நதி எப்படி கடலில் கலப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறதோ, அது போல் நீங்கள் அனைவரும், ஒரு இலட்சியத்துடன் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் நதி நீரை பருகுவார்கள். கெட்டவர்கள் அதில் கல்லை விட்டெறிவார்கள். ஆனாலும் நதி ஓடிக் கொண்டே இருக்கிறது. கடைசியில் அது கடலில் கலக்கிறது. அதுபோல், நீங்களும் உங்கள் பாதையில் குறுக்கிடுவதை புறக்கணித்து விட்டு பயணப்பட வேண்டும்.
கடந்த 1999-ஆம் ஆண்டு மத்திய அரசு தொலைத் தொடர்பு கொள்கை வகுத்தபோது, 2012 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி தொலைப்பேசி இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என இலக்கு நிருணயிக்கப்பட்டது. ஆனால், 2010-ஆம் ஆண்டிலேயே கடந்த மாதமே நம் நாடு இந்த இலக்கை அடைந்துவிட்டது.
பல்வேறு துறைகளிலும் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அறிவார்ந்த சமுதாயம் என்பது சமூகத்தை முன்னேற்ற பயன்பட வேண்டும். சமுகத்திற்கு பயன்படுவதே சிறந்த கல்வி.
இவ்வாறு அமைச்சர் ஆ.இராசா பேசினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், அப்பல்லோ கல்வி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணி, முதல்வர் சுதாகர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment