#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, July 13, 2010

ரூ.12 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள்: ஆ.இராசா

இந்தியாவில் ரூ. 12,000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள் அமைக்கப்படும் என்று, மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் .இராசா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தை முழு கணிணி மாவட்டமாக மாற்றும் திட்டத்தின் தொடக்க விழா உதகமண்டலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசுகையில், “இந்தியாவில் அனைத்து நிருவாகங்களையும் கணிணிமயமாக்கும் வகையில் 50 மாவட்டங்கள் முழு கணிணி மாவட்டங்களாக மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கோவை, அரியலூர், கிருட்டினகிரி, பெரம்பலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் முழு கணிணி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது 6-ஆவது மாவட்டமாக நீலகிரி மாவட்டத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய 4 துறைகளில் அனைத்து தகவல் பரிமாற்றங்களும் கணிணி மூலமே மேற்கொள்ளப்படும். நிலப்பதிவேடுகள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பெற கணிணி மூலமே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.

”இப்போது தொடங்கப்பட்டுள்ள முழு கணிணி மாவட்டமாக மாற்றும் திட்டம் 2 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இதற்கான பயிற்சிகளும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும். இதைத் தவிர இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் ரூ. 12,000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப வங்கிகள் அமைக்கப்படும். அதேபோல, நாட்டில் ஒரு இலட்சம் சிற்றூர்களில் பொது சேவை நடுவங்களும் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களிலிருந்து தகவல்களை பெற விரும்புவோர் பொது சேவை நடுவங்களின் மூலமும் விண்ணப்பித்து உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO