#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையை ஆ.இராசா வெளியிட்டார்

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை 4 மணிக்கு நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மாநாட்டு மைய நோக்கப்பாடலுடன் விழா தொடங்கியது. தமிழக தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரையாற்றினார்.

மாநில நிதி அமைச்சர் பேராசியர் க.அன்பழகன், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா, மத்திய உரம், இரசாயன துறை அமைச்சர் மு.க.அழகிரி, தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி ஆகியோருக்கு மாநாட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையையும், ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தமிழ் வளர்த்த பேராயர் இராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் அஞ்சல் தலைகளையும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அவற்றை முதல் அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO