புதிய மென் பொருள் குறுந்தகடு ஆ.இராசா வெளியிட்டார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. இதன் தொடக்க விழா முரசொலி மாறன் அரங்கத்தில் 24ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு நடந்தது.
இதன் தொடக்க விழாவுக்கு பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.
தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென் பொருள் குறுந்தகடுகளை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஆ. இராசா பேசுகையில், இணைய தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்தும் கணினி மயம் ஆகும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல் அமைச்சர் கருணாநிதி நியமித்துள்ளார். புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இந்த இணை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.
மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்ட புதிய மென்பொருள் குறுந்தகடுகள் மாநாட்டில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment