செம்மொழி: அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு படங்கள்
கோவையில் கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
இந்த பேரணியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த கண்கவர் காட்சியை சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தனி மேடையில் அமர்ந்தபடி முதலமைச்சர் கலைஞர், குடியரசு தலைவர் பிரதிபா, ஆளுநர் பர்னாலா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடுவண் தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டனர்.
40 அலங்கார ஊர்திகளின் முன்னே நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தபடி நடனமாடினர்.
0 comments:
Post a Comment