கோவையில் பிரதீபா பாட்டீலுக்கு வரவேற்பு
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக குடியரசு தலைவர் பிரதீபா பட்டீல் இந்திய விமானப்படை விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை கோவைக்கு வந்தடைந்தார்.
மாலை 4.30 மணிக்கு தில்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு இரவு 7.50 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தது.
விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடுவண் அமைச்சர்கள் ஆ.இராசா, மு.க.அழகிரி, தயாநிதிமாறன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, மாநிலங்களவை உறுப்பினர் மு.க.கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.
0 comments:
Post a Comment