தமிழக முதல்வர் கலைஞர் சார்பில் அமைச்சர் ஆ.இராசா பேச்சு: 'வணங்காமண்' ஏற்பு
தமிழ்நாட்டில் சென்னை அருகே நிலைகொண்டுள்ள ”வணங்காமண்” கப்பலில் உள்ள நிவாரணப்பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேசுமாறு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஆ.இராசா வலியுறுத்தினார். இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டிணா, கோத்தபயா, பசில் ஆகியோருடன் பேசியதால், இன்னும் சில நாட்களில் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அளித்த கொடை மூலம் 884 மெட்ரிக் டன் எடை கொண்ட உணவுப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களையும் சுமந்து கொழும்பு நோக்கி சென்றது வணங்காமண் என்ற பெயரிடப்பட்ட கேப்டன் அலி கப்பல். அக்கப்பல் கொழும்பை அடைந்தபோது இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாக அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் இலங்கை அரசு சில காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது.
இதையடுத்து சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12-ஆம் தேதி வணங்காமண் கப்பல் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு தமிழக முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்து தில்லிக்கு சென்று, கிருஷ்ணாவை சந்தித்து கொடுத்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியளித்திருந்தார்.
ஆனால், வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியது எனக் கூறிய இந்திய கப்பற்படை அதிகாரிகள், கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு பணியாளர் சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் கலைஞர் வணங்காமண் கப்பலுக்கு தண்ணீர் அனுப்ப ஆணையிட்டார். அதனை ஏற்று அதிகாரிகள் தண்ணீர் அனுப்பினர்.
இந்நிலையில் 24-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சவின் இரண்டு சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்துரையாடப்படும் என கிருஷ்ணாவை அறிவித்தார்.
இதனை அறிந்த தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர் ஆ.இராசாவை தொடர்புகொண்டு, அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழக அரசு சாபில் பேசுமாறு கூறினார். கலைஞரின் கட்டளைபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்ற அமைச்சர் ஆ.இராசா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கலைஞர் கூறியதாக வலியுறுத்தினர்.
இதையடுத்து, இரு நாட்டு அதிகாரிகள் குழு கலந்துகொண்ட கூட்டத்தில் வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து இந்தய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை அதிகாரிகள் குழு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாக சம்மதம் தெரிவித்தது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆ.இராசா, ”தி.மு.க. தலைவர் கலைஞர், ஈழமக்களின் நலனுக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரின் வலியுறுத்ததால் , இலங்கை அதிகாரிகள் குழுவிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த அழுத்தம் காரணமாக நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்துவார்” என்றார்.
16 comments:
நன்றி இராசா அவர்களே,
உங்களின் முயற்சி அளப்பரியது.
வணங்காமண் கப்பலின் சென்னை பொறுப்பு எங்கள் மனிதம் அமைப்பிற்கு வந்த பின், அதற்காக பல நண்பர்களை அணுகினோம். ஆனால் பலர் நழுவி விட்டது உண்மை. சிலர் மட்டுமே தன்னுடைய முகம் வெளியில் தெரியாமல் உதவியதும் உண்மை. ஆனால், நாங்கள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பெடுக்காமல், தானே உணர்வுடன் முன்வந்து தமிழினத்தின் மீது உள்ள பற்றை செயல்பாட்டின் மூலம் காட்டியதற்கு உலகத் தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது எங்களது கடமை. தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நேரில் நன்றி சொல்லவும் உள்ளோம்.
நன்றி
அக்னி சுப்ரமணியம்
மனிதம் - மனித உரிமை அமைப்பு
சென்னை
www.manitham.net
உங்கள் வலைப்பதிவு பற்றி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. ஆக்கப்பூர்வமான பணிகளை தொடர்ந்து செய்ய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
தங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள்! (உங்கள் தொகுதியிலிருந்து)
என் அன்பு உடன்பிறப்பே! அளப்பறிய செயல்செய்தாய்! நீங்க இப்படி செஞ்சா தான் நாங்க இங்க்க பிளாக் ஓட்டவே முடியும். தாங்கலை தாங்கலை!
பனி சிறந்ததே....!! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!!
ஆனால் அங்கு தற்பொழுதைய நிலை என்னவென்றே தெரியாமல் உள்ளது..!!
நம் உதவிகள் கண்டிப்பாக அவர்களுக்கு தேவை..!! எதற்கும் செவி சாய்க்காத இலங்கை அரசின் சிம்மாசனர் ராஜ பக்க்ஷே இந்த உதவி பொருட்களையாவது ஏற்று கொள்ள வேண்டும்...!! உணர்வுகள் வரிகள் முட்டி மோதுகின்றன...!!! ஆனால் வரிகள் நீர் துளிகளாய் கண்களை நனைப்பதால் எழுத முடியவில்லை..!!!
நம் சொந்தங்களுக்கு வாழ வழி செய்யுங்கள்....!!!
நன்றி .....
தங்களின் அளப்பரிய செயல்கண்டு உவகை கொள்ளுகின்றேன். தொடரட்டும் உங்கள் தொண்டு.
மு.மு.அப்துல்லா,
தலைமை பொதுக்குழு உறுப்பினர்,
திராவிட முன்னேற்றக் கழகம்,
புதுக்கோட்டை.
தங்களுடைய செயல் அனைவருக்கும் மிகவும் நன்மை பயக்கும் செயலாகும். நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வாழ்த்துகிறேன். நீங்களும் பதிவர் என்பதில் இந்த பதிவுலகம் பேருவகை அடைகிறது.
வடிவேலன் ஆர்.
http://gouthaminfotech.blogspot.com
வலை உலகிற்கு வரவேற்கிறோம்!
இப்போது ஐ.டி. தொழில் நலிவடைந்து உள்ளது. நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன திட்டங்கள் உள்ளன?
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
ஊட்டியில் எழுத்து வடிவமில்லாத பேச்சு வழக்கில் அழியும் நிலையில் பத்துக்கும் மேற்பட்ட பேச்சு வழக்கு மொழிகள் இருக்கின்றன!
அவற்றை பாதுகாக்க என்ன முயற்சி செய்ய போகிறீர்கள்!
தலைவர் கலைஞர் அவர்கள் சீரிய ஆசியுடன் தங்கள் பணி தொடர வாழுததுக்கள்.
VALTHUKKAL..
வாழ்துக்கள்,இலங்கை தழிழர்களுக்கு சுதந்திர காற்றை
சுவாசிக்க பாடுபடுங்கள்.இன்னும் அவர்கள் சிறையில
அடைக்கப்பட்டுள்ளார்கள்???
நன்றி...
மிக்க மகிழ்ச்சி, இது மாதிரியான விடயங்களில் கலைஞரை பாராட்டமல் இருக்க முடிவதில்லை..
http://www.tamilvasam.blogspot.com
தொடரட்டும் உங்கள் நற்பணி
Thank you sir for what you have done... god bless you...
rgds
mutharasan
Post a Comment