பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் 75 -ஆவது பிறந்த நாள் விழாவில் நடுவண் அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு பேசிய பேச்சு :
"......இந்த மேடைக்கு கலைஞர் அவர்கள் வந்த பொழுது 'பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த முதலமைச்சர் கலைஞர் அவர்களே' என்று சொன்னார்கள்.தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அடையாளம் இருக்கின்றது.பெரியாரைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அருள்கூர்ந்து யாரும் என்னைக் கருதக்கூடாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். பெரியார் நெஞ்சிலே தைத்தமுள்தான். அதை எடுத்தவர் கலைஞர். ஆனால், பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்.
வரலாற்று ஆசிரியர்கள் யாராவது இங்கு இருந்தால் வரலாற்றை செய்யக்கூடிய மாணவர்கள் யாராவது இந்த இருபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருக்கிற மேடையைக் குறித்துக்கொண்டு அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்................
இந்த மண்ணில் பார்ப்பனஜாதியும், பறப்பள்ளுஜாதியும் ஒழித்துவிட்டு எல்லோரும் ஒரே ஒரு ஜாதி என்று சொல்லுகின்ற இந்த முயற்சிக்குப் பெயர் தேசத்துரோகிதான் என்றால், நான் சசகும்வரை தேசத்துரோகியாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டவர் பெரியார்.ஆனால்,அந்த பெரியார் பார்ப்பனஜாதியும் பறப்பள்ளுஜாதியும் ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற நான் உயர்வாக மதிக்கிற அய்யா அவர்களுக்கு தோன்றாத யோசனை பூகோளப்பரப்பில் உள்ள ஜாதிகளை எல்லாம் ஒன்றுபடுத்தி,ஒரே இடத்தில் என்னுடைய காலத்திலாவது நான் அய்யா அவர்களுக்கு செய்யப்போகின்ற கடமை பூகோளத்தில் ஒன்றாக ஆக்கி, ஒரே இடத்தில் 100 வீடுகளைக் கட்டி அந்த 100வீட்டில் பிராமணனும் வாழ்வான்,வன்னியனும் வாழ்வான், ஆதிதிராவிடனும் வாழ்வான், முக்குலத்தோனும் வாழ்வான் என்று ஒருபுரட்சியை செய்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய மகத்தான தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை சொல்ல பெருமைப்படுகிறேன்".
(நன்றி :"விடுதலை". நிகழ்வு நாள்: 2-12-2007)
4 comments:
http://thamizhoviya.blogspot.com/2007/12/blog-post_1085.html அருள்கூர்ந்து இந்த சுட்டியை படிக்க வேண்டுகிறேன்.
ஆ.இராசா அவர்களின் ரசிகன் நான். அவருடைய கொள்கை உறுதி எப்போதும் அவர்பால் என்னை ஈர்க்கும். இனி அவரை இத்தளத்திலும் காண்பேன்.
http://iyangu.blogspot.com/
சமத்துவபுரங்கள் மிக உன்னதமான மிகப்பெரிய லட்சியத்திட்டம்.
அதில் இரண்டு கருத்தில்லை. ஆனால் நடப்பும் அமலாக்கலும்
அப்படி இல்லை என்பதை நேர்மையோடு எற்றுக்கொள்ள வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்ட, மற்றும் பட்டியலின மக்கள் தான் வசிக்கிறார்கள்.
samathuvapuram project is really a amazing one from DMK's side... keep going and eradicate caste systems..
Post a Comment