கலைஞருக்கு அண்ணா விருது வழங்கியது தகுமா? : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. அறக்கட்டளை சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. கலைஞர் அண்ணா விருது பெற காரணமாக இருப்பது எது? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
முதலமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி முன்னிலையிலும் கவிஞர் வாலி தலைமையிலும் நடந்த இக்கருத்தரங்கில், சுப.வீரபாண்டியன், நடுவண் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன், நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் தென்னவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்தக் கருத்தரங்கில் ”கலைஞர், அண்ணா விருது பெற காரணமாக இருப்பது பகுத்தறிவுக் கொள்கையே” என்று வாதிட்ட அமைச்சர் ஆ.இராசாவின் உரை அடங்கிய காணொலியை வெளியிடுகிறோம்.
0 comments:
Post a Comment