தமிழகத்தில் தான் அதிகளவு மக்கள் நலத்திட்டங்கள் : அமைச்சர் ஆ.இராசா பெருமிதம்
அரியலூர் மாவட்டம் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் 2009-10 ஆம் ஆண்டுக்கான கையேட்டை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம் பெற்று கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா, ஆண்டிமடம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
..........................................................................................................................................................
வேப்பந்தட்டை, அக். 22-
இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா பெருமிதத்துடன் கூறினார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிராமத்தில் தமிழக அரசின் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் 720 பயனாளிகளுக்கு இலவச தொலைக்காட்சிகளை வழங்கி மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் இலவச வண்ண தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஆயிரம் தொலைக்காட்சிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் அதிகளவில மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ.ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் வாரம் மூன்று முட்டை, ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி, ஏழை பெண்களுக்கு திருமண உதவித்திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் கூறினார்.
தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து மத்திய அரசும் ரூ.60 ஆயிரம் கோடியை விவசாய கடன் தள்ளுபடி செய்தது. தமிழக மக்கள் நோய், நொடியின்றி வாழ்வதற்காக, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளிய மக்களும் ரூ.1 லட்சம் வரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில், காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா, கோட்டாட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேறொரு விழா,
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை குத்து விளக்கேற்றி மத்திய அமைச்சர் ஆ.ராசா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர், மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சித்தலைவர் மல்லிகா ராமசாமி ஆகியோர் கலந்துகொடனர்..
0 comments:
Post a Comment