#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, October 22, 2009

பா.ம.க. கூடாரம் காலி! : அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் இணைந்தனர்

பெரம்பலூர், அக்.22-

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் 3000 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மத்திய அமைச்சர் ஆ.இராசா முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கை.கி.செழியன் தலைமையில் பரவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கமலக்கண்னன், வடக்கலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருவள்ளுவன், ஓகளூர் ஊராட்சிமன்றத் தலைவர் பூங்கோதை இராமலிங்கம், நன்னை ஊராட்சிமன்றத் தலைவர் அமிர்த கணேசன், கீழபெரம்பலூர் ஊராட்சிமன்றத் தலைவர் கொளஞ்சி, வேப்பூர் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், செந்துறை ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் நல்லவடமலை, பாமக மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பாமக செந்துறை ஒன்றிய கிளைச் செயலாளர் கொளஞ்சி, பாமக செந்துறை ஒன்றிய செயலாளர் படையப்பா, வேள்விமங்களம் இரவிக்குமார் உட்பட 3000 பேர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

க.ஆடுதுறை கிராமத்தில் உள்ள ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தி.மு.க.வில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் ஆ.இராசா பொன்னாடை போர்த்தி வரவேற்றுப் பேசினார்.

அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
அனைத்து சாதியினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் தலைவர் கலைஞர். இன்றைய தினம் பா.ம.க.விலிருந்து 3000 பேர் வந்து தி.மு.க.வில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கே ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் போன்ற பொதுமக்களுக்கு பணியாற்றுபவர்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற நிதிவசதியை தலைவரிடமும் தளபதியிடமும் கேட்டு பெற்றுத் தருவேன். கலைஞர் ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் இராஜ்குமார், சிவசங்கர், மாவட்டக் கழகத் துணை செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணை செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO