#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Thursday, February 25, 2010

பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பிதழ்

புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டப் பேரவை கட்டட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

அப்போது, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதிமாறன், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி .ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

Sunday, February 14, 2010

வயலார் ரவியை நேரில் பார்த்தார் கலைஞர்

லிபேரியாவில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து, சென்னை எம்.எம்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் இரவியை, இன்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டினா, நடுவண் தொலை தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் குடும்ப நலவாழ்வுத் துறை இணையமைச்சர் காந்திச்செல்வன், முதலமைச்சரின் செயலாளர் கி.இராசமாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Saturday, February 06, 2010

தில்லியில் மு.க.ஸ்டாலின்: ஆ.இராசா உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்பு

புதுதில்லி:​

தில்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை ஆ.ராசா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெறும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி சார்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் .​ இதற்காக தில்லி வந்த ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் . ராசா,
தயாநிதி மாறன், நெப்போலியன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தமிழக அரசின் தில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

Friday, February 05, 2010

பெரம்பலூரில் புதிய சமத்துவபுரம்: ஆ.இராசா தலைமையில் ஸ்டாலின் திறந்தார்

அரியலூர் மாவட்டம் நடுவலூரில் ரூ.2.29 கோடியில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் ஆஇராசா, நெப்போலியன், மாநில அமைச்சர் செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவசங்கர், பாளை.அமரமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர். உள்படம்: சமத்துவபுரம்.
...................................................................................................................................................
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பெரியார் நினைவு சமத்துவபுர திறப்பு விழா, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டடங்கள், மேம்பாலங்கள், மாவட்ட விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ஆகியவற்றிற்கான திறப்புவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா தலைமை வகித்தார். மாவட்டத் திட்ட அலுவலர் அமல்ராஜ் வரவேற்றார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல்துறை இணை அமைச்சர் நெப்போலியன், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கினார்.

அண்ணா நினைவு நாள் பேரணி : ஆ.இராசா பங்கேற்பு


அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் தி.மு.க. சார்பில் பேரணி நடைபெற்றது.
சேப்பாக்கத்திலுள்ள தமிழக முதல்வர் கலைஞரின் சட்டப் பேரவை உறுப்பினர் கட்டத்தின் முன்னிருந்து தொடங்கிய பேரணி அண்ணா நினைவிடத்தில் நிறைவுற்றது. இதில், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராச்சாமி மற்றும் மத்திய அமைச்சர் ஆ.இராசா உட்பட ஏராளமானோர் கால்ந்துகொண்டனர்.

ஏப்ரல் இறுதிக்குள் 38 நகரங்களில் 3 ஜி சேவை : அமைச்சர் ஆ.இராசா தகவல்


கோவை:
கோவையில், பிஎஸ்என்எல் சார்பில் 3 ஜி செல்போன் சேவை தொடக்கவிழா நடந்தது.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வரதராஜன் வரவேற்றார். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் விளக்க உரையாற்றினார். 3ஜி சேவையை, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தொடக்கி வைத்து, ஊட்டியில் இருந்த தமிழக கதர் துறை அமைச்சர் இராமச்சந்திரனிடம் 3ஜி செல்போனில் பேசினார்.

இந்த விழாவில், ஆ.இராசா பேசுகையில்,
நம் நாட்டில் 3ஜி அலைவரிசை, இராணுவம் மற்றும் விமான இயக்கத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல்முறையாக, பொது மக்கள் பயன்பாட்டுக்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. 3ஜி சேவை மூலம், கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 78,000 இணைப்புகளும், நீலகிரி மாவட்டத்தில் 18 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளது. அடுத்தமாதத்தில், திருப்பூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, அதைத்தொடர்ந்து மதுரை மற்றும் புதுச்சேரியில் இச்சேவை தொடங்கப்படும். ஏப்ரல் இறுதிக்குள் தமிழ்நாட்டில் 38 நகரங்களில் இச்சேவை வழங்கப்பட்டு விடும்.

இப்போது, ஒரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு, ஆய்வரங்கு போன்றவை நடந்தால், அனைத்து பல்கலை. மாணவர்களும் பயன் அடையும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் இணைக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார்.

வெலிங்டன் பகுதிக்கு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை: ஆ.இராசா


வெலிங்டன் இராணுவ முகாமில் மாற்று திறன் உடையோருக்கு இலவச உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உபகரண பொருட்களை வழங்கினார். மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன், மாநில கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனுள்ளனர்.
.................................................................................................................................................................

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாமில் மாற்று திறன் உடையோருக்கு இலவச உபகரண பொருட்கள் வழங்கும் விழாநடந்தது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், தேசிய பார்வை குறைபாடுள்ளோர் அமைப்பு, பாரத செயற்கை உறுப்புகள் தயாரிப்போர் சங்கம் சார்பில் ரூ.20 இலட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வெலிங்டன் ராணுவ முகாம் கமாண்டர் பிரிகேடியர் ஜாதவ் தலைமை வகித்தார். கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்திர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா,.சிறப்பு விருந்தினராக பங் கேற்று உபகரண பொருட் களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசுகையில்,
இராணுவம் சார்பில் முன்னாள் இராணுவ வீரர்கள், போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இம்முகாம் மூலம் உதவி வழங்கப்படுகிறது. உடல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி அதிகளவில் வளர்ந்துள்ளது. வெலிங்டன் பகுதி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நல திட்ட உதவிகள் கிடைக்க பெறவில்லை என்று கன்டோன்மென்ட் போர்டு திமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இராணுவ முகாம் கமாண்டர், கதர் வாரியத்துறை அமைச்சர், கலெக்டரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

  ©Template by Dicas Blogger.

TOPO