ஏப்ரல் இறுதிக்குள் 38 நகரங்களில் 3 ஜி சேவை : அமைச்சர் ஆ.இராசா தகவல்
கோவை:
கோவையில், பிஎஸ்என்எல் சார்பில் 3 ஜி செல்போன் சேவை தொடக்கவிழா நடந்தது.
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வரதராஜன் வரவேற்றார். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் குல்தீப் கோயல் விளக்க உரையாற்றினார். 3ஜி சேவையை, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தொடக்கி வைத்து, ஊட்டியில் இருந்த தமிழக கதர் துறை அமைச்சர் இராமச்சந்திரனிடம் 3ஜி செல்போனில் பேசினார்.
இந்த விழாவில், ஆ.இராசா பேசுகையில்,
நம் நாட்டில் 3ஜி அலைவரிசை, இராணுவம் மற்றும் விமான இயக்கத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல்முறையாக, பொது மக்கள் பயன்பாட்டுக்கு பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. 3ஜி சேவை மூலம், கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 78,000 இணைப்புகளும், நீலகிரி மாவட்டத்தில் 18 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட உள்ளது. அடுத்தமாதத்தில், திருப்பூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, அதைத்தொடர்ந்து மதுரை மற்றும் புதுச்சேரியில் இச்சேவை தொடங்கப்படும். ஏப்ரல் இறுதிக்குள் தமிழ்நாட்டில் 38 நகரங்களில் இச்சேவை வழங்கப்பட்டு விடும்.
இப்போது, ஒரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு, ஆய்வரங்கு போன்றவை நடந்தால், அனைத்து பல்கலை. மாணவர்களும் பயன் அடையும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் இணைக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார்.
0 comments:
Post a Comment