வெலிங்டன் பகுதிக்கு திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை: ஆ.இராசா
வெலிங்டன் இராணுவ முகாமில் மாற்று திறன் உடையோருக்கு இலவச உபகரண பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உபகரண பொருட்களை வழங்கினார். மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன், மாநில கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனுள்ளனர்.
.................................................................................................................................................................
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாமில் மாற்று திறன் உடையோருக்கு இலவச உபகரண பொருட்கள் வழங்கும் விழாநடந்தது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், தேசிய பார்வை குறைபாடுள்ளோர் அமைப்பு, பாரத செயற்கை உறுப்புகள் தயாரிப்போர் சங்கம் சார்பில் ரூ.20 இலட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு வெலிங்டன் ராணுவ முகாம் கமாண்டர் பிரிகேடியர் ஜாதவ் தலைமை வகித்தார். கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சவுந்திர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் ஆனந்த ராவ் விஷ்ணு பாட்டீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா,.சிறப்பு விருந்தினராக பங் கேற்று உபகரண பொருட் களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசுகையில்,
இராணுவம் சார்பில் முன்னாள் இராணுவ வீரர்கள், போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இம்முகாம் மூலம் உதவி வழங்கப்படுகிறது. உடல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி அதிகளவில் வளர்ந்துள்ளது. வெலிங்டன் பகுதி மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நல திட்ட உதவிகள் கிடைக்க பெறவில்லை என்று கன்டோன்மென்ட் போர்டு திமுக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இராணுவ முகாம் கமாண்டர், கதர் வாரியத்துறை அமைச்சர், கலெக்டரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment