பெரம்பலூரில் புதிய சமத்துவபுரம்: ஆ.இராசா தலைமையில் ஸ்டாலின் திறந்தார்
அரியலூர் மாவட்டம் நடுவலூரில் ரூ.2.29 கோடியில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் ஆஇராசா, நெப்போலியன், மாநில அமைச்சர் செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவசங்கர், பாளை.அமரமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர். உள்படம்: சமத்துவபுரம்.
...................................................................................................................................................
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பெரியார் நினைவு சமத்துவபுர திறப்பு விழா, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டடங்கள், மேம்பாலங்கள், மாவட்ட விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ஆகியவற்றிற்கான திறப்புவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது.
மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா தலைமை வகித்தார். மாவட்டத் திட்ட அலுவலர் அமல்ராஜ் வரவேற்றார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல்துறை இணை அமைச்சர் நெப்போலியன், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கினார்.
0 comments:
Post a Comment