கொள்கை பரப்பு செயலாளராக ஆ.ராசா நீடிக்கிறார்: தி.மு.க. விளக்கம்
ஆ.ராசா கட்சி பதவியை ராஜினாமா செய்யவில்லை, அவர் கொள்கை பரப்பு செயலாளராக நீடிக்கிறார் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ.ராசா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அந்த கடிதம் தி.மு.க. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
பொதுக்குழு முடிவில் இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. கட்சிக்கு அதுபோன்ற ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை. பொதுக்குழுவில் கடிதத்தை வாசித்ததாகவும் என் காதில் எதுவும் விழவில்லை. இப்போது வரை ஆ.ராசா தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அவர் அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பார். அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வெளியில் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறினார்.
Post a Comment