பதவியை துறந்து விட்டு சென்னை திரும்பிய ஆ.ராசாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு
புதுடில்லியில் இருந்து திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவுக்கு சென்னை விமான நிலையத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கக் கூடாது என்ற நோக்கில் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை ஏற்று மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த ஆ.ராசா சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் ராசாவுக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.



Post a Comment