தில்லியில் இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் தொடங்கியது
இந்திய மொழிகளை மேலும் பல துறைகளில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தில்லியில் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா இன்று (12.11.2010) தொடங்கி வைத்தார்.
==========================================================
புதுதில்லி:
தில்லியில் தேசிய இ நிர்வாகம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையத்தை தொடங்கி வைத்தார்.
www.tdil-dc.in என்ற புதிய இணையதளத்தையும் தொடக்கிவைத்து பேசிய அமைச்சர், இந்திய மொழிகள் தொழில்நுட்ப பரவல் மையம் வாயிலாக மொழிகள் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொது மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும். பல்வேறு துறைகளில் இந்திய மொழிகளை பயன்படுத்தும் வாய்ப்பும் இந்திய மொழிகள் தொழில்நுட்பம் மேலும் விரிவடையவும் இது உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.
இந்த விழாவில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சச்சின் பைலட்டும் கலந்து கொண்டு பேசினார்.
nice
Post a Comment