நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களின் மனம் விரும்பிய சேவகன் ஆ.இராசா!
மலை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மக்கள் தங்களுடைய மனவருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்ப்பாட்டம், பேரணி. எங்கும் ஒருவிதமான அமைதி. இன்னும் சொன்னால் மலை மாவட்டத்தின் பொலிவில் ஓர் தொய்வு ஏற்பட்டாற்போல ஒரு நிசப்தம். ஆம். ஒரு வருட காலத்தில் தோன்றிய ஒளியாக எதிரிகள் கூட மெச்சும் அளவிற்கு நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் மனம் விரும்பிய மக்கள் சேவகனாக பணியாற்றிய தலித் இன தகைமையாளன், தனது தொகுதி மக்கள் இயற்கைப் பேரிடரால் இன்னல் படுவது கண்டு இரவோடு இரவாக ஓடி வந்து குறை தீர்த்த அந்த குணக்குன்று. இன்று இனமானத்தின் பேரால் சாதிய பகையால் இன வெறியின் பலிகடாவாக வடநாட்டு வாலாக்களால் மாற்றப்பட்டு விட்டது.
ஜனநாயக படுகொலை செய்யும் முகந்திரமாக கொடநாட்டு கோமளவல்லியின் மயக்க வார்த்தைகளால் மதி மயங்கிய ஆதிக்க சக்திகளின் செயலால் எங்கள் வீட்டுப் பிள்ளை ராசாவின் அமைச்சர் பதவியை பறித்திடலாம். ஆனால் மலை மாவட்ட மக்களின் இதயத்தில் இருந்து என்றைக்கும் ராசாவைப் பிரித்திட எந்த கொம்பனாலும் முடியாது என்று உறுதியோடு கலைஞர், தளபதி எனும் போர்படையில் ஒரு தளகர்த்தராக விளங்கிய ராசாவின் மாண்புமிகு பறி போயிருக்கலாம். ஆனால் அவருடைய மானமிகுவைப் பிரிக்க எந்த ஆதிக்க சக்தியாலும் பார்ப்பன வெறியர்களாலும் முடியாது என்ற கோஷங்களும் விண்ணைப் பிளக்கின்றன.
ராசா அவர்கள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகி 20 மாதங்கள் கடந்து விட்டது. இந்த 20 மாதத்தில் மாதம் ஒரு முறை தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் சென்று வராத வீதிகள் இல்லை. தெருக்கள் இல்லை என்கிற அளவுக்கு ஒரு சாமானிய தொண்டனாக, உதகை வந்தால் யார் எந்த நேரத்தில் போய் பேசினாலும் அதுகுறித்து விவாதிக்கும் தோழனாக, இன்னும் தன் கட்சியினர் வந்து குறை சொன்னால் உடனடியாக உதவும் எண்ணம். எதிர்க் கட்சியினரை கூட அன்போடு பேசி அரவணைத்து பணியாற்றும் திறன். அரசாங்க விதிமுறை பிரச்சினைப் பற்றி பேசுகின்ற அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் பேசி ஆலோசனை வழங்கி அவர்கள் பணியாற்றிடும் ஊக்கம் பெற்று உத்வேகத்துடன் செயல்படுவதால் மலை மாவட்டம் மகத்தான வளர்ச்சி கண்ட மாவட்டமாக மாறிடும் சூழலில் ராசாவும், ராமச்சந்திரனும் சேர்ந்து மலை மாவட்டத்தில் அ.தி.மு.க.வை அடியோடு சாய்க்கின்றனர் என்ற அ.தி.மு.க.வினர் செய்த சூழ்ச்சி என்ன தெரியுமா? சென்னையில் இருந்த கோமள வல்லிக்கு கொடுத்த தகவல் அடுத்த முறை ராசா கோத்தகிரிக்கு வருகிறார், கொடநாட்டில் உள்ள காமராஜ் நகர், அண்ணா நகர் மக்களை பார்க்கப் போகிறார் என்றதும் கொடநாட்டு பார்ப்பனத்திக்கு உடம்பெல்லாம் எரிச்சலாக உடன்பிறவா சகோதரி துணையுடன் கொடநாடுக்கு பறந்து வந்துள்ளார். வந்த இடத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை கோமளவல்லியின் முகத்தில் விட்டெறிந்து ஓடிய போது வெறுத்துப் போய் மாளிகைக்குள் முடங்கி விட்டவர். மூன்றாம் நாள் கிடா வெட்டி விருந்து போடத் தான் வெளியில் வந்தாராம். இவர் தான் ஒரு கட்சியின் தலைவியாக உள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ராசா அவர்கள் மேற் கொண்ட குறை கேட்பு நிகழ்ச்சிகள், தலைவர் கலைஞரின் சீரிய திட்டங்கள் மேற் பார்வை செய்தல் ஆகிய நிகழ்ச்சியில் ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் ராசாவோடு சென்ற இடங்களில் எல்லாம் ராசா மீது இந்த மலை மாவட்ட மக்கள் அளப்பரிய அன்பு, கூடுகின்ற கூட்டமெல்லாம் அவரைப் பார்த்து பேசி விட்டு செல்லும் போது முகத்திலே ஒரு பொலிவு. பொது நிகழ்வுகள் மட்டுமின்றி தங்கள் குடும்பத்தில் ஒருவரிடம் பேசுவது போல, அவரும் நலம் விசாரிப்பதும் இது கலைஞரின் தம்பிகளுக்கே உரிய அன்பாகவே கருதப்படுகிறது.
இங்கே வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக எத்தனையோ பேர் இருந்துள்ளனர். தான் பாரத தேசத்தின் அமைச்சராக இருந்தாலும் தன் மக்கள், தனது தொகுதி என ஒரு சாமானிய தொண்டனாக, தோழனாக பழகிய ராசாவை பழி வாங்கப்படுவதை நீலகிரி மக்கள் ஒருபோதும் விரும்பிட மாட்டார்கள். நீலகிரி மக்கள் அமைதியானவர்கள். அதனால் தான் சாத்வீக அடிப்படையில் இது வரை அமைதிப் போராட்டங்கள் நடத்தினார்கள். மலை மாவட்டத்தில் உள்ள பார்ப்பன நாளேடுகளின் செய்தியாளர்கள் கூட ராசாவின் மீது ஏவப்பட்டுள்ள ஆரிய இன வெறியின் அஸ்திரத்தைக் கண்டு வேதனைப்படுமளவிற்கு அன்பு காட்டும் ராசா அடித்தட்டு மக்களின் உணர்வுபூர்வமான ஒரு மக்கள் சேவகனுக்கு மந்திரி பதவியை இனத்து வேஷம் காட்டி பறிக்கலாம். ஆனால் மலை மாவட்ட மக்களின் இதயத்தில் இருந்து, இரண்டறக் கலந்து விட்டு எங்கள் இல்லத்தின் பிள்ளை ராசாவை எந்த கொம்பனாலும், கோமளவல்லியாலும் பிரித்திட முடியாது.
====================================================
- உணர்வுகளை எழுதியவர்: ம.வெங்கடேஷ், நீலகிரி மாவட்டம்.
====================================================
1 comments:
Its absolutely true..."keduvan kedu ninaippan"..... BE CONFIDENT
Post a Comment