காலமெல்லாம் கலைஞர் புகழ்பாடும்... புதிய சட்டப் பேரவை கட்டடம்
"புதிய சட்டமன்ற வளாகம், காலமெல்லாம் கலைஞர் புகழ்பாடும்'' என்று, புதிய சட்டமன்றத்தில் 2010-11 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அன்பழகன், கலைஞருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
வெள்ளிக்கிழமை காலை 9.34 மணிக்குத் தனது பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர் அன்பழகன், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பேசியது வருமாறு :
"அரியவென்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்''
என்னும் திருவள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் தமிழக முதல்வர் கருணாநிதியின் மாபெரும் சாதனையாகத் திகழும் இந்த வானுயர் சட்டப்பேரவை மணிமாடம், தமிழ்நிலம் உள்ளளவும், முக்கடல் உள்ளளவும் நிலைபெற்று விளங்கிக் காலமெல்லாம் கலைஞரின் புகழ்பாடும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பேரவையினரின் ஒருமித்த வாழ்த்தினை கலைஞருக்கு தெரிவித்துக்கொள்ள நான் விழைகிறேன். இவ்வாறு நிதியமைச்சர் க.அன்பழகன் கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்.
0 comments:
Post a Comment