தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் - கண்கவர் படங்கள்
வரும் நிதியாண்டில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் விவரம்:-
* அரசு கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்சி போன்ற முதுகலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் ரத்து.
* சென்னை அண்ணா சாலையில் உள்ள சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
* 36 சமத்துவபுரங்கள் கட்டப்படும்.
* 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி, ரூ.10 கோடியில் வழங்கப்படும்.
* எழுத்தறிவு பெற்ற பெண்கள் குறைவாக இருக்கும் விழுப்புரம், பெரம்பலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில், `படிக்கும் பாரதம்' என்ற பெண் கல்வி திட்டத்துக்கு ரூ.68 கோடி ஒதுக்கப்படும்.
* மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்காக மதுரையை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா தொழில்ட்பப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
* விழுப்புரம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் ஒன்று உருவாக்கப்படும்.
* புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுடன் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* மத்திய அரசு நிதியுதவியுடன் 7 புதிய பல்தொழில்ட்ப கல்லூரிகள் தொடங்கப்படும். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் ஒரு பலதொழில்ட்பக் கல்லூரியும் தொடங்கப்படும்.
* கடந்த 2 ஆண்டுகளில் அண்ணா தொழில்ட்ப பல்கலைக்கழகங்கள் மூலம் பண்ருட்டி, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான கட்டிடங்கள் ரூ.93 கோடியில் கட்டப்படும்.
* திருவண்ணாமலையில் ஒரு புதிய அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும்.
* ரத்தம் உறையாமை (ஹீமோபிலியா) நோய்க்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும்.
* சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடியில் கட்டப்படும்.
* இராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.17 கோடியில் 150 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதி கொண்ட புற்றுநோய் மையம் கட்டப்படும்.
* விழுப்புரம் மாவட்டத்தில் சிப்காட் மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* சென்னையில் ஆறுவழித்தட ராஜீவ்காந்தி சாலையில் முக்கிய சந்திப்புகளில் ரூ.171 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
* சென்னையை போலவே கோவையில் மேற்கு வெளிவட்டச்சாலை அமைக்கப்படும்.
* சென்னை கோயம்பேட்டில் நாளொன்றுக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், ரூ.120 கோடியில் வரும் நிதியாண்டில் கட்டப்படும்.
* கர்ப்பிணிகளுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் அயோடின் கலந்த உப்பு இலவசமாக வழங்கப்படும்.
* வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்.
* மாற்றுத்திறன் படைத்தோர் உயர்கல்வி பயில்வதற்கு, தனிக்கட்டணம் செலுத்தவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, உணவு உதவித்தொகை ரூ.200-ல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்படும்.
* தேனியில் ரூ.10 கோடியில் ஒரு சிறப்பு அரசு மனநல மருத்துவமனை அமைக்கப்படும்.
* யானைக்கால் நோயாளிகளுக்கு (நான்காவது வகை) மாத உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான தனி துறை, முதல்-அமைச்சர் மேற்பார்வையில் இயங்கும்.
* ஒரு லிட்டர் பதநீர் கொள்முதல் விலை ரூ.7-ல் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்படும்.
* காதி நூல் நூற்பு மற்றும் நெசவாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
* அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 50 ஆயிரம் இளைஞர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 42 ஆயிரம் இளைஞர்களுக்கும், மகளிருக்கும், பலதொழில்ட்ப கல்லூரிகள் மூலம் 35 ஆயிரம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
* அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பு பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
* வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும். * தேச விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த கோபால் நாயக்கரின் நினைவாக விருப்பாட்சியில் மணிமண்டபம் நிறுவப்படும்.
* தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமியின் சொந்த ஊரில் அவருக்கு ஒரு மணி மண்டபம் அமைக்கப்படும்.
* எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
* கரும்பு விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடப்பு அரவை பருவத்துக்கு (2009-2010) கரும்பு டன் ஒன்றுக்கு மேலும் கூடுதல் விலையாக 100 ரூபாயை உயர்த்தி, ரூ.1,550-ல் இருந்து ரூ.1650 ஆக வழங்கப்படும். * 2009-2010-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்குப் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை, ரூ.2013 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.2,500 கோடியாக உயரும்.
* விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட 10,000 சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும்.
0 comments:
Post a Comment