புதிய பேரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா
புதிய பேரவை கட்டடத்தினுள் நேற்று நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகமும், சட்டப்பேரவை வளாகமும் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டு மார்ச் 13-ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
புதிய சட்டசபையில், முதல்முறையாக, நிதி அமைச்சர் அன்பழகன், இந்த நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
புதிய பேரவை கட்டடத்தினுள் நேற்று நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் நெப்போலியன், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தி.மு.க. தொழிற்சங்க நிருவாகி செ.குப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் பட்ஜெட் கோப்பு அடங்கிய பெட்டியை நிதி அமைச்சர் அன்பழகன் கொண்டுவந்து முதலமைச்சர் கலைஞரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், சட்டப் பேரவை உறுப்பினர் இரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment