ஊட்டியில் தி.மு.க. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது
தி.மு.க. இளம் சொற்பொழிவாளர்கள் பயிற்சி பட்டறை ஊட்டியில் உள்ள மோனார்க் ஹோட்டலில் 16-ஆம் தேதி தொடங்கியது. தி.மு. கழகத்தின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளரும், மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சருமான ஆ.ராசா வரவேற்புரையாற்றினார்.
தொடக்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இந்த பயிற்சி முகாம் திமுகவின் கொள்கைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டுபோய் மிக எளிதாக சேர்க்க வேண்டும் எனபதே இந்த முகாமின் குறிக்கோள். பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை எல்லோரும் இணைந்து மென்மேலும் வளர்க்க வேண்டும். திமுகவின் வரலாறுகளையும், கழகத்தினுடைய தியாகங்களையும் மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும்” என்றார்.
திராவிட இயக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி திராவிட இயக்க பார்வை ஆகிய தலைப்புகளில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன், கோவை மு.ராமநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் நெடுஞ்செழியன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

Post a Comment