ரஷ்யாவில் மத்திய அமைச்சர் ஆ.ராசா...
இந்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா 5 நாள் சுற்றுப்பயணமாக 10 ஆம் தேதி காலை ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ரஷிய தொலை தொடர்பு துறை அமைச்சர் இகோர் செகோலேவுடன் அமைச்சர் ஆ.இராசா பேச்சு நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, ரஷிய நாட்டின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் பார்வையிடும் ஆ.ராசா 16-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவரது ரஷ்ய பயணம் இந்திய அரசின் தொழில்நுட்பத் துறைக்கு பேருதவியாக அமையும் என அத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment