#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, January 08, 2010

தொழில் தொடங்குவது பற்றி ஆ.ராசாவுடன் ஜப்பான் அமைச்சர் சுகிரோ ஆலோசனை

இந்தியாவில் தொழில் தொடங்குவது தொடர்பாக ஜப்பான் நாட்டின் அமைச்சர் சுகிரோ, மத்திய அமைச்சர் ஆ.இராசாவுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தில்லி வந்துள்ள ஜப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுகிரோ, இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்குவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் .இராசா, “தகவல் தொடர்பு தொழில்நுட்பம் குறித்து ஜப்பான்இரு நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்பு குறித்த புதிய ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வாறு ஏற்படுத்தலாம், எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்றும், குறிப்பாக, நான்கான் தலைமுறை தொழில்நுட்பத்திற்கான உற்பத்தி சாதனங்களை வெகு விரைவாக உற்பத்தி செய்து, ஜப்பான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கும், அது தொடர்பாக பூர்வாங்க ஆலோசனைகள் நடைபெற்றது” என்று கூறினார்.

ஜப்பான் அமைச்சர் சுகிரோ பேசுகையில், “ இந்தியாவில் ஜப்பான் முதலீடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் ஜப்பான் அமைச்சர் சுகிரோ மும்பைக்குச் சென்று பிரபல தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO