#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
Showing posts with label செம்மொழி மாநாடு. Show all posts
Showing posts with label செம்மொழி மாநாடு. Show all posts

Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையை ஆ.இராசா வெளியிட்டார்

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை 4 மணிக்கு நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் மாநாட்டு மைய நோக்கப்பாடலுடன் விழா தொடங்கியது. தமிழக தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரையாற்றினார்.

மாநில நிதி அமைச்சர் பேராசியர் க.அன்பழகன், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா, மத்திய உரம், இரசாயன துறை அமைச்சர் மு.க.அழகிரி, தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி ஆகியோருக்கு மாநாட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையையும், ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தமிழ் வளர்த்த பேராயர் இராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் அஞ்சல் தலைகளையும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அவற்றை முதல் அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Read more...

Thursday, June 24, 2010

புதிய மென் பொருள் குறுந்தகடு ஆ.இராசா வெளியிட்டார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்கிறது. இதன் தொடக்க விழா முரசொலி மாறன் அரங்கத்தில் 24ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு நடந்தது.

இதன் தொடக்க விழாவுக்கு பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் பூங்கோதை வரவேற்றார்.


தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென் பொருள் குறுந்தகடுகளை மத்திய அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார். அதை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார்.


இந்த விழாவில் மத்திய அமைச்சர் ஆ. இராசா பேசுகையில், இணைய தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று. நாடு முழுவதும் தேசிய மின் ஆளுமை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அனைத்தும் கணினி மயம் ஆகும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத்துறைக்கு தனி அமைச்சரை முதல் அமைச்சர் கருணாநிதி நியமித்துள்ளார். புதிய மென்பொருள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும். இந்த இணை மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டுரைகள் இணைய தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும் என்றார்.

மத்திய அமைச்சர் ஆ. இராசா வெளியிட்ட புதிய மென்பொருள் குறுந்தகடுகள் மாநாட்டில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

Read more...

Wednesday, June 23, 2010

செம்மொழி: அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு படங்கள்





கோவையில் கோலாகலமாக தொடங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.

இந்த
பேரணியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த கண்கவர் காட்சியை சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

தனி மேடையில் அமர்ந்தபடி முதலமைச்சர் கலைஞர், குடியரசு தலைவர் பிரதிபா, ஆளுநர் பர்னாலா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடுவண் தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பார்வையிட்டனர்.

40 அலங்கார ஊர்திகளின் முன்னே நாட்டுப்புறக் கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தபடி நடனமாடினர்.

Read more...

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு படங்கள்



கோவை மாநகரில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றுவரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் மாநாட்டை தொடங்கிவைத்தார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், தமிழ் அறிஞர்கள் கா.சிவதம்பி, வா.செ.குழந்தைசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாடு நடைபெறும் பந்தலில் நடுவண் அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.இராசா, தயாநிதிமாறன், மாநில அமைச்சர்கள் உட்பட பல்லாயிரக்கணக்காணோர் நிறைந்திருக்கின்றனர்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO