#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
Showing posts with label நேர்காணல்கள். Show all posts
Showing posts with label நேர்காணல்கள். Show all posts

Friday, February 04, 2011

ஆ.ராசா எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை: கபில்சிபல்

2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்று த்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் விளக்கமளித்துள்ளார்.


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, கடந்த மாதம் 31-ஆம் தேதி அமைச்சர் கபில் சிபலிடம் அளித்திருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 2 நிறுவனங்களுக்கு ஆ.ராசா சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், நீதிபதி சிவராஜ் பாட்டீலின் அறிக்கை குறித்து டில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கபில்சிபல், 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், மத்திய அரசும் எந்த நிறுவனத்துக்கும் சாதகமாக செயல்படவில்லை என்றார். 1991 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு கொள்கையை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பின்பற்றவில்லை என்றும் அவர் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் இருந்தே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிகள் மீறப்பட்டதாகவும் 2003ஆம் ஆண்டுக்கு பின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படை தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் கபில்சிபல் தெரிவித்தார். விதி மீறல் தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சர்கள் பதில் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Read more...

Friday, January 07, 2011

CAG அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் கபில் சிபல் பேட்டி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது. மத்திய அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான தணிக்கை குழு (CAG) அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது. அந்த குழுவின் கணக்கீட்டு முறை மத்திய அரசுக்கு மிகுந்த வேதனை தருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையால் வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை கொண்டு வந்த பா.ஜ.க., தற்போது நாடாளுமன்றத்தை முடக்குகிறது, இதன் மூலம் சாதாரண மக்களுக்கு பா.ஜ.க அநீதி இழைத்துவருகிறது. தணிக்கை குழு (CAG) வெளியிட்ட மிக மோசமான அறிக்கையே, எதிர்கட்சிகள் மக்களிடம் தவறானதை சொல்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

1999ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கொண்டு வந்த முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற பாலிசியை ஆ.ராசா செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Monday, December 20, 2010

முன் ஜாமீன் வாங்க மாட்டேன்: ஆ.ராசா பேட்டி

சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் பெறப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா கூறியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய அரசில் தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இந்நிலையில், உடல் நலக்குறை காரணமாக உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆ.ராசா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சட்டம் பயின்றுள்ள நான் எந்தவொரு சட்ட விதிமுறைகளையும் புறக்கணிக்க மாட்டேன் என்றும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் வீணாக குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
==================================================

சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார்: கலைஞர்
...............................................................................................................

சென்னையில் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது என்றும், இந்தக் கூட்டணியை யாரும் கலைக்க நினைத்தாலும் முடியாது என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது வழக்கமானதுதான் என்றும், சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Read more...

Monday, December 13, 2010

ஆ.ராசா மீது ஆக்‌ஷன்?!: கலைஞர் சிறப்பு பேட்டி

தி.மு.க.வுக்கு சவாலாகவும், நெருக்கடியாகவும் உள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்க்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவருடைய மனநிலையை படம் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பேட்டி இது.....


கேள்வி
: ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானபோது, அகில இந்திய அளவில் தி.மு.க.வை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. அப்போது அதை வெற்றிகரமாக எதிர்கொண்டீர்கள். அரசியல் ராஜதந்திரி எனப்படும் நீங்கள் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எத்தகைய நிலை எடுக்கவிருக்கிறீர்கள்?

கலைஞர்:

ஜெயின் கமிஷன் அறிக்கை மட்டுமல்ல, தி.மு.கழகத்தைத் தனிமைப்படுத்த எத்தனையோ சூழ்ச்சிகள் யார் யாராலோ நடத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும் தி.மு.கழகம் எவ்வாறு வெற்றிகரமாக தலைநிமிர்ந்து நின்றதோ, அதைப் போலவே இந்தப் பிரச்சனையிலும் தி.மு.கழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பொறுத்தவரை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் இழப்பு என்பது யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட கருத்தியலான இழப்பாகும். இந்த இழப்பினை கணக்கிடப்பட்ட முறையே விவாதத்திற்குரியது. இதைத் தான் நான் ஒரு விழாவில் பேசும்போது, அந்தக் காலத்தில் பேசாப் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திரையில் நடப்பதை வர்ணிக்கும் ஒருவர் அதோ பார் பகாசூரன் வருகிறான். அவனுக்கு பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு முக்காதம் என்றேல்லாம் சொல்வான். ஐந்து காதம் என்றால் ஐம்பது மைல். அந்த அளவுக்கு ஒருவன் இருக்க முடியுமா என்றெல்லாம் யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை என்றெல்லாம் பேசினேன்.

தற்போது கிடைக்கின்ற வருவாயைப் போல இந்த முயற்சியை பத்தாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இதே அளவிற்கு கிடைத்திருக்கும் என்று கற்பனையில் ஒரு தொகையை தாங்களே நிர்ணயித்துக் கொண்டு, அந்தத் தொகை இழப்பாகி விட்டது, அந்தத் தொகை யாருக்கோ போய்விட்டது, அந்தத் தொகை அளவுக்கு ஊழல் நடந்துவிட்டது என்றெல்லாம்தான் அனுமானித்து ஏடுகளும், ஊடகங்களும் அதனை பெரிதுப்படுத்தி பூதாகரமாக்குகின்றன. உண்மை ஒருநாள் வெளிவரும்போது உண்மையான இழப்பு எவ்வளவு, அந்த இழப்புக்கு காரணம் யார் அல்லது எது என்பது வெளிவரத் தான் போகிறது.

கேள்வி: மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவளித்து அதில் பங்கேற்றுள்ள நிலையில் சில நாட்கள் முன்புவரை மத்திய அமைச்சராக இருந்தவரின் வீடு, அலுவலகம், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள் என பல இடங்களிலும் சி.பி.ஐ. ரெய்டு நடந்திருப்பது ஏன் என்று பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளதே?
கலைஞர்:
சி.பி.ஐ. ரெய்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் அல்லது காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்சநீதிமன்றத்தால் இந்தப் பிரச்சனையில் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையிலும் ஆணைகளின் அடிப்படையிலும்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாலேயே ஒருவரை குற்றவாளி என்று கருதிட முடியாது.

கேள்வி: 60 ஆயிரம் கோடி இழப்பு என்று தொடங்கிய எதிர்க்கட்சிகள் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்கிற அளவுக்கு கணக்கை உயர்த்தியுள்ளன. மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உலகிலேயே இந்தளவுக்கு எங்குமே முறைகேடு நடந்ததில்லை என தி.மு.க. மீதும் அதன் சார்பில் அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்கள் பதில் என்ன?

கலைஞர்:

1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி என்பதெல்லாம் பூதாகரமாக பெரிதுபடுத்தப்படுகிற புள்ளி விவரம்தான். கடந்த ஆண்டுகளில் - கடந்த கால அமைச்சர்கள் கையாண்ட அதே நடைமுறையை அந்தத் துறையின் பின்பற்றியிருப்பதாகத்தான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராசா திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால்தான் கடந்த காலத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்பதை அறிய உச்சநீதிமன்றம், கடந்த பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருந்தே சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றது. அத்தகைய விசாரணை நடைபெற்றால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஆ.ராசா மீது கட்சியும் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று வெளியாகும் செய்திகள்...?

கலைஞர்:

இந்தக் கேள்விக்கு விளக்கமாக நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலே பதில் கூறியிருக்கிறேன். ராசா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும். அதுவரையில், நான் எதுவும் சொல்வதற்கில்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்று தி.மு.க நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபடுகிற வரையில் நாங்கள் ராசாவை கைவிட தயாராக இல்லை என்று நான் கூறி, அது ஏடுகளில் வெளிவந்துள்ளது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கபடாத நிலையிலேயே அவரை கட்சியிலிருந்து ஓரம் கட்டிவிட மாட்டார்களா என்று ஒருசிலர் நினைப்பதையும் நான் அறிவேன்.

கேள்வி: தேசியக் கட்சிகள் - மாநிலக் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்திருப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறதே?

கலைஞர்:

சட்டமன்ற தேர்தலில் ஸ்பெக்டரம் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தாதா, ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆசைப்படுகின்றன. தமிழ்நாட்டில் கழக ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்களாலும், ஏழையெளியோர், நலிந்த பிரிவினர்க்கு செய்யப்படும் சலுகைகளாலும் கழக அரசுக்கு மக்களிடம் பேராதரவு இருப்பதை கண்டு, இதை எப்படி கெடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த எதிர்கட்சியினர் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பயன்படுத்தியாவது ஏதாவது நடக்காதா என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

உதாரணம் வேண்டுமென்றால், ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூலையில் பிகார் மாநில முதலமைச்சர் மீது 1500 கோடி ரூபாய் ஊழல் புகார் சொல்லி சட்டசபையையே நடக்க விடாமல் ஸ்தம்பிக்க செய்த பிறகும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எந்த அளவிற்கு அவருக்கு வாக்குகளை வழங்கினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் பிரச்சனை சட்டமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

கேள்வி:
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசின் திட்டங்கள், தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களை அடைந்துள்ளதா? மக்களிடம் இத்திட்டங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு, வரும் தேர்தலில் தி.மு.க.வை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்தும் என நம்புகிறீர்களா?

கலைஞர்:

விலையை குறைக்க ஒரு அரசினால் என்னென்ன முயற்சிகள் எடுக்க முடியுமோ அத்தனையையும் தி.மு.கழக அரசு எடுத்து வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள். அலுவலர்களுக்கு, தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக ஊதிய உயர்வையும் சலுகைகளையும் அவ்வப்போது அளித்தும் வருகின்றோம். எனவே, தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்யும் நல்லாட்சி - மக்களின் நல்வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் ஆட்சி - கழக ஆட்சி என்பதை தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு மக்களும் நன்றாகவே அறிந்துள்ளார்கள், புரிந்துள்ளார்கள். எனவே, நல்லாட்சி மேலும் தொடர வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு வரும் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
===============================================
(நன்றி: நக்கீரன் - டிசம்பர் 2010)
===============================================

Read more...

Monday, November 15, 2010

(வீடியோ) மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்: ஆ.ராசா பேட்டி

சென்னையில் இருந்து டெல்லி திரும்பிய அமைச்சர் ராசா, பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, திமுக தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டதை அடுத்து நான் என் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். அதற்காக என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டே என்று அர்த்தமல்ல. நான் எந்த தவறும் செய்யாதவன்.

அரசுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான நிலையை தவிர்க்கவே ராஜினாமா செய்தேன். எதிர்க்கட்சிகளால் எந்த வித இடையூறும் இன்றி நாடாளுமன்றம் அமைதியாக நடைபெறவேண்டும் என்று ராஜினாமா செய்துவிட்டேன். ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்பேன்.


இந்த துறைக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் உண்மையாக உழைத்திருக்கிறேன். என் முயற்சியால்தான் வாடிக்கையாளர்கள் 70 கோடியை தாண்டியிருக்கிறார்கள். நான் இந்த தேசத்திற்கு என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்

Read more...

இந்து நாளேட்டில் ஆ.ராசாவின் பேட்டி (நவம்பர் 14 இதழில் வெளியானதன் தமிழாக்கம்)

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?


அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் சகஜமானவைதான். நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் கூறியது போல, ‘மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை, மிகத்தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு கீழான வர்கள் இல்லை’. சட்டம் தன் கடமையைச் செய் யட்டும். ஒரு கறையுடன் நான் வெளியேற விரும்ப வில்லை.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஆ.இராசா பேட்டியளித்தார்


Read more...

Saturday, November 13, 2010

”நான் செய்தது தவறா?” : ஆ.ராசா

தெளிவான சொற்கள்... அழுத்தமான வாதங்கள்... தடுமாற்றமில்லாத குரல்... இவைதான் ஆ.ராசாவிடன் நக்கீரன் பேசியபோது வெளிப்பட்டவை.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், பிரதமர் உட்பட நிதியமைச்சகம் - சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரைகளை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் 2001-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதால் அரசுக்கு 1 லட்சத்துவ 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிப்பதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்த குற்றச்சாற்றுகள் பற்றி விரிவாகவே நம்மிடம் பேசினார் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா.

மத்திய கணக்குத் தணிக்கை துறை என்பது ஒரு நிறுவனம். அது தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அறிக்கையின் சாராம்சம் என்ன என்பதை தலைமைக் கணக்குத் துறை அதிகாரி வினோத்ராய் வெளியிடவில்லை. அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. சில ஊடகங்களும் எதிர்கட்சிகளும் மட்டும் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற இந்த சர்ச்சைகள் குறித்து நான் பலமுறை விளக்கமளித்திருந்தாலும், இந்த சி.ஏ.ஜி.யை முன்வைத்து எழுப்பப்படும் குற்றச்சாற்றுகளுக்கு என் பதிலை அளிக்க விரும்புகிறேன்.

”இந்தியாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை 1994-ஆம் ஆண்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. அந்த எலத்தில் 3 நிறுவனங்கள் கலந்து கொண்டு அலைக்கற்றைகளை பெற்றன. அப்போது, ஒரு செல்போன் அழைப்புக்கான கட்டணம் 16 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ஏலம் எடுத்த 3 கம்பெனிகளும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. அதாவது, தங்களுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏலத்தொகையை கட்ட முடியாது என்றும், அதனை உரிய முறையில் சரி பண்ண வேண்டும் என்றும் கோரின. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டும் இதை சரி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும்படியும் சொன்னது. அதன்படி, 1999ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டாம். ஸ்பெக்ட்ரம் பெறும் நிறுவனங்களிடம் லாபத்தில் பங்கு என நிர்ணயிக்கலாம். அதுதான் அரசுக்கு அதிக வருவாய் தரும் என்று மத்திய அரசு தனது கொள்கையை வகுத்தது. இதனடிப்படையில்தான் இந்தத் துறைக்கு பொறுப்பு வகித்த பா.ஜ.க. அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி ஆகியோரும் அதன் பின் பொறுப்பு வகித்த தயாநிதி மாறனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்கள். இதுதான் இப்போதும் தொடர்கிறது.

2007 ஆம் ஆண்டு நான் இந்த துறைக்கு பொறுப்பேற்ற போது, எஸ்.டி.டி. அவுட்கோயிங் கட்டணம் 2 ரூபாயாகவும், உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் 1 ரூபாய் 60 பைசாவாகவும் இருந்தது. அப்போது இருந்த செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டணம் குறையவும் என்ன செய்யலாம் என ஆய்வும் ஆலோசனையும் நடத்தியதில் பயன்படுத்தபடாமல் நிறைய அளவில் ஸ்பெக்ட்ரம் இருப்பதையும் அதைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதன் மூலம் அரசுக்கு வருமானம் கூடும். அதேநேரத்தில், அதிகப் பயன்பாட்டின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையும் என்பதை அறிந்தோம்.

இதையடுத்து, தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய்) இது குறித்து பரிசீலித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்தது. பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஸ்பெக்ட்ரத்தை புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தால், தங்களின் ஏகபோக வியாபாரம் பாதிப்படையும் என நினைத்த சில நிறுவனங்கள் இதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால், பயன்பாட்டாளர்கள் குறைந்த கட்டணத்தில் செல்போன் வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டதால், புதிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2 ரூபாயாக இருந்த எஸ்.டி.டி. கட்டணம் இப்போது வெறும் 40 பைசா. 1 ரூபாய் 60 பைசாவாக இருந்த உள்ளூர் அழைப்பு இப்போது 25 பைசாதான் - அதுவும் 10 பைசாவாக குறைய போகிறது.
இந்தியாவில் இப்போது தொலைபேசி, செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 கோடியே 50 லட்சம் பேர். பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து, வாடிக்கையாளருக்கான கட்டணத்தை குறைய செய்து, அரசுக்கான வருமானத்தை கூடுதலாக்கியதுதான் நான் செய்த தவறு. இதுதான் அநியாயம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இதைத்தான் குற்றச்சாற்றாக முன்வைக்கிறார்கள்.

2007 இல் செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை 2001ஆம் ஆண்டுக்கான கட்டணத்திலேயே கொடுத்ததாகவும், குற்றம்சாற்றி கொண்டிருக்கிறார்கள். கட்டணம் நிர்ணயிப்பது எங்கள் துறை அல்ல. அது ட்ராய் என்கிற தன்னாட்சி பெற்ற தனியார் நிறுவனத்தின் பணி. 2007 இல் ட்ராய் வகுத்து கொடுத்த கொள்கையில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கான கட்டணமே நீடித்தது. அதன்படி ஒதுக்கினோம். இதில் எங்கள் தவறு எங்கே இருக்கிறது?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு நான் எழுதிய கடிதமும், அவர் எழுதிய பதிலும் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. இந்த ஒதுக்கீடு தவறு என்றோ, இதை நிறுத்தி வையுங்கள் என்றோ அவர் ஒருவரி கூட குறிப்பிடவில்லை. ஒருசில நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த செல்போன் சேவை இன்று இந்தியாவின் குக்கிராமம் வரைக்கும் கிடைக்க செய்திருப்பதுதான் என் தவறு. ஒரு வீட்டை விற்றால் ஒருமுறைதான் பணம் கிடைக்கும். அதையே வாடக்கைக்கோ, குத்தகைக்கோ விட்டால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் கிடைக்கும். அதுபோலத்தான் ஸ்பெக்ட்ரத்தை ஏல முறைக்கு பதில் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அரசுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்திருக்கிறோம். இது தவறா? இது அநியாயமா?

சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து எதுவும் முடிவெடுக்க முடியாது என்பதை சட்டம் தெரிவாக குறிப்பிடுவதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக சொல்லியிருக்கிறார். செல்போனை பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு வசதியும், கட்டணக் குறைப்பு மூலமாக லாபமும் கிடைத்துள்ளது. மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்தும்போது ஏற்படும் இழப்பை அரசு ஏற்றுக்கொள்வது வழக்கம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மக்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது. அரசுக்கும் நிரந்தர வருமானம் வருகிறது. இதுதான் நான் செய்த தவறு என உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள்” என்றார் அமைச்சர் ஆ.ராசா விளக்கமாகவே...

- நக்கீரன் இதழில் வெளிவந்த பேட்டி

Read more...

Sunday, September 12, 2010

(வீடியோ) ஊட்டியில் ரோப் கார் அமைக்க அமைச்சர் ஆ.ராசா ஆய்வு


நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோப் கார் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் உதகை படகு இல்லத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரோப் கார் அமைக்க நீலகிரியில் 9 இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.




Read more...

Monday, May 24, 2010

ஆ.இராசா மீது எந்த தவறும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

புதுதில்லி, மே 24-

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததால், அமைச்சர் .இராசா மீது எந்த தவறும் இல்லை என்று, பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

ஐ.மு., கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, 4 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது இதனை குறிப்பிட்டார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாக எழுந்த புகார்கள் பற்றி பாராளுமன்றத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுள்ளது. நானும் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவை அழைத்து பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழி காட்டுதல்களின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும், 2003-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆ.இராசா வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தொலை தொடர்பு ஆணையமும் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

அமைச்சர் ஆ.இராசா அளித்துள்ள விளக்கத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் நடந்ததை தெரிவித்துள்ளார். ஆகவே அமைச்சர் ஆ.இராசா மீது தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் நான் ஒரு தீர்க்கமான கருத்தை வெளியிடுவது சரியாக இருக்காது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கும், 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் சரியானதை காண வேண்டியது அவசியமாகும்.

ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பதை ஆட்சி தொடக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆட்சியில் எந்த மட்டத்தில் ஊழல் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும் நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

Read more...

Monday, May 17, 2010

நீரா ராடியாவுடன் உரையாடல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து அமைச்சர் ஆ.இராசா சிறப்பு நேர்காணல்

ஜூனியர் விகடன் இதழுக்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா அளித்த சிறப்பு நேர்காணல்...

வினா: ''வருமான வரிப் புலனாய்வுத் துறையினர் பதிவு செய்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்களில் தனியார் டெலிகாம் 'லயஸன்' அதிகாரி நீரா ராடியாவும் நீங்களும் பேசியதாக வெளியாகும் தகவல் பற்றி..?''

''எப்போது யார் என்னோடு பேசினார்கள்... நான் யாரோடு என்ன பேசினேன் என்பதையெல்லாம் காலவரிசைப்படி நினைவுபடுத்திக் கொள்வது... என்னால் மட்டுமல்ல... எவராலும் சாத்தியப்படாதது. ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய அமைச்சர் யார் என்பதை தெரிந்துகொள்வதில் பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ஆ.இராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அவர்களின் சுய விருப்பு வெறுப்புகளின் வெளிப்பாடும் உண்டு. இவற்றுக்கெல்லாம் எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாது.

அந்த வகையில், இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.இராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா?’ உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவர்களும் ஆராய்ந்திருக்கக்கூடும். 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிந்துகொள்ள முயற்சித்திருக்கக்கூடும். அந்த வகையில் என்னிடமும் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஊடக நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - நிருவாகத்தில் முட்டாள் அல்ல. எனவே, சில ஊடகங்கள் தங்கள் அறியாமைக்கு என்னை இரையாக்க வேண்டியதில்லை!.''

வினா: ''அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா ராடியாவோடு நீங்கள் பேசுவதாக ஆடியோ உரையாடல் கூறுகிறது. அவருக்கும் உங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது?''

''நீரா ராடியா டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பொதுத் தொடர்பு அலுவலர். இது குறித்து டாடா நிறுவனம் தெளிவான பத்திரிகைச் செய்தியையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும் தலையாய பணிகளில் ஒன்று - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வர்த்தகத்தை சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் கூட்டங்களிலும் இதர சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார். என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மற்ற இடங்களிலும் செய்கிற அல்லது ஈடுபடுகிற காரியங்களுக்கு எல்லாம் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது முறையல்ல. என்னோடு ஒரு விருந்தில் ஒருவர் கலந்துகொண்டு படம் பிடித்துக்கொண்டார் என்பதற்காக, அவர் செய்யும் ஏனைய காரியங்களுக்கு நானே பொறுப்பு என்பதுபோல் செய்தி வெளியிட முயற்சிப்பது பத்திரிகை தர்மமல்ல என்பதை பத்திரிகை துறையிலே இருப்பவர்கள் உணரவேண்டும்.''

வினா
:
''டாடா நிறுவனம் நீங்கள்தான் மறுபடியும் இந்த இலாகாவுக்கு அமைச்சராக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 'தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சரானால் டெலிகாம் துறையிலிருந்து டாடா வெளியேற வேண்டும்' என்று ரத்தன் டாடா கூறியதாகவும் சொல்லப்படுகிறதே... இந்தளவுக்கு டாடா யோசிக்கக் காரணம் என்ன?''

''ஆங்கில சேனல் ஒன்றில் என்னுடைய தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பானது என்ற அடிப்படையில், அடுத்த நாள் பத்திரிகையைப் பார்த்து அதன் விவரங்களை (டெக்ஸ்ட்) படித்துப் பார்த்தேன். அதுகுறித்து மட்டுமே உங்களுக்கு என்னால் விளக்கமளிக்க முடியும். வேறு உரையாடல்கள் குறித்து எனக்குத் தகவல் இல்லை; எனவே, அது குறித்து நான் கருத்து சொல்வது நியாயமாக இருக்காது.''

வினா: ''2008-இல் இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற சமயத்திலேயே வருமான வரி புலனாய்வுத் துறையினர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு உரையாடல்களைப் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் நீரா ராடியா சில நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் பேரம் பேசியதாகவும், சில நிறுவனங்களுக்கு முன் உரிமை கொடுக்கச் செய்வதற்கு அவர் முயற்சித்ததாகவும்கூட தகவல்கள் உள்ளனவே..?''

''அதில் நீரா ராடியா என்ன பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், எந்த ஒரு விதிமுறையும் யாரோ ஒரு தனி நபரால் மாற்றக்கூடிய அளவுக்கு அரசாங்கம் பலகீனமானதல்ல... நானும் சட்டம் படிக்காதவனல்ல!''

வினா: ''சில ஆவணங்களை வருமான வரியினர் சி.பி.ஐ. வேண்டுகோள்படி அனுப்பி வைத்ததாகவும், அதில் தங்கள் துறையிலும் இன்னும் சில அமைச்சகங்களிலும் நீரா ராடியா தலையிட்டு இடைத் தரகராகச் செயல்பட்டதாகவும்கூட செய்திகள் வருகிறதே?''

''ஓர் ஆவணத்தைப்பற்றி பேச இரண்டு பேருக்குத்தான் தகுதி உண்டு. ஒருவர் அந்த ஆவணத்தை எழுதியவர் அல்லது தயாரித்தவராக (Executor) இருக்கவேண்டும். இன்னொருவர், அந்த ஆவணத்தை வைத்திருப்பவராக (Custodian) இருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் ஆவணங்களில் நான் இந்த இரு நிலைகளிலும் தொடர்புடையவன் அல்ல; எனவே, அது உண்மையா... போலியா என்பதை நான் தீர்மானிக்க முடியாது.''

வினா: ''ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் எடுத்தவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை தவறான வழியில் கொண்டுவந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து தங்கள் கருத்தென்ன?''

''என்னுடைய துறையின் பணி என்பது உரிமங்கள் மற்றும் அவைகளுக்கான அலைவரிசை ஒதுக்கீடு மட்டுமே. உரிமங்கள் வழங்கிய பிறகு ஒரு நிறுவனம் கொண்டுவரும் அன்னிய முதலீடு பற்றி நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது நிதி மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பணிதான்.''

வினா: ''இரண்டு துறைகளுக்கும் இடையே நடக்கும் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் மீடியாக்களில் வெளி வருகிறது... இதன் பின்ன ணியில் எந்த சக்தி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

''நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாற்றப்படுகின்றேன்? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் - அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்துவைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன் ஐடியா போன்ற 'ஏற்கெனவே இருக்கும்' நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால், தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது; மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தகக் கூட்டு (Cartel) உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான். அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இது குறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, 'நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை; நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும்' (I don't want to be a stagnated stinking pool.. Flowing water only explores current) என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். அதுமட்டுமல்ல, இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிருப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தத் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.''

வினா: ''இப்போது 3 ஜி ஏலத்தில் விட ஏற்பாடு நடப்பதுபோலவே அதற்கு முந்தைய 2 ஜி-யை ஏன் ஏலத்தில் விடவில்லை?அங்கேதானே சர்ச்சையின் அடிப்படையே எழுகிறது?''

''நல்லகேள்வி! இதை சில நாளிதழ்களும் எழுப்பியுள்ளன. 2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2 ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3 ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2 ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 10, 20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.''

வினா: ''இந்த உரிமங்களை பெற்ற கம்பெனிகளில் நீங்களோ உங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களோ முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறதே?''

''இது அப்பட்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சி கலந்த பொய். ஒரு கம்பெனியின் பங்குகள் யார் யாருக்கு சொந்தம் என்பதை இணைய தளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தகவல் உரிமைச் சட்டத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.''

வினா: ''கடந்த சில மாதங்களுக்கு முன்பு உங்கள் துறையைச் சேர்ந்த சீப்-போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பாலி என்பவர் இரண்டு கோடியை கையூட்டு பெறும்போது சி.பி.ஐ-யிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளாரே? இதே அதிகாரியோடு கைதான அருண் டால்மியா உங்களுக்குத் தெரிந்தவர் என்றும் அவர் மீது அன்னியச் செலவாணி குற்றச்சாற்றுகள் இருக்கிற செய்தியும் வந்ததே?''

''அமைச்சர் என்ற முறையில், துறை சார்ந்த நிகழ்ச்சிகளிலும், வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் பலர் என்னோடு கலந்துகொள்கிறார்கள். அவர்களை எல்லாம் அடையாளப்படுத்தி ஞாபகப்படுத்தி நேரடியாக தொடர்புபடுத்த எத்தனிப்பது சரியல்ல.. என்னுடைய பிறந்த நாளிலோ, வேறு விழாக்களிலோ, புத்தாண்டுக் கொண்டாட்டத்திலோ, பலர் பலரோடு என்னை சந்திக்க வருகிறார்கள்; புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். படத்தில் இருக்கின்ற அனைவரோடும் தனிப்பட்ட பரிச்சயம் இருக்கவேண்டும் என்று பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவருக்கு அவசியமில்லை. நீங்கள் சொல்லுகின்ற நபர்மீது வழக்கு ஒன்று இருந்து - அந்த வழக்கில் என் பங்கோ, முயற்சியோ இருக்குமானால் வழக்கின் விசாரணையில் வெளிப்பட்டிருக்கும். அதுபற்றிய குற்றச்சாற்றேகூட என் மீது எதுவுமில்லை.''

வினா: ''நெருப்பில்லாமல் புகையுமா? இத்தனை மீடியாக்களும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?''

''ஊடகங்களுக்கு இவ்விஷயத்தில் எந்த சார்புத்தன்மையும் இல்லை என்று சொன்னால், பாமர மனிதன்கூட ஏற்றுக்கொள்ள மாட்டான். காரணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மீடியாக்கள் மூலமாக விளம்பரத்திற்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி வரை செலவு செய்கின்றன. இந்த விளம்பர வருமானத்தை எந்த பத்திரிகையோ சேனலோ இழக்க முன்வருமா? எனவே, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் நியாயமாக செயல்படவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த துறைக்கு பொறுப்பேற்றவுடன் என்னென்ன மாறுதல் அடைந்துள்ளது என்பதைப் பற்றி பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதுவதில்லை. தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமட்டுமல்ல... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது. இப்படியிருக்க ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு ஆங்கில பொருளாதார நாளேட்டில் இது 'இராஜாவின் அவமானம்' [It is Raja's shame] என்று எழுதினார்கள். நான் சொல்கின்றேன்... 'It is my pride' ஆம், இது எனது பெருமை!

நல்ல விஷயங்களைப் பாராட்டாவிட்டாலும் போகிறது... உண்மையை இவர்கள் பேச மறுப்பது ஏன்? அதற்கு பின்னால் உள்ள சக்திகள் எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர்' கேள்வி!'

(ஜூனியர் விகடன் இதழுக்கு நன்றி)

Read more...

Sunday, May 02, 2010

ஆ. இராசா பதவி விலகமாட்டார்: தில்லியில் கலைஞர் அறிவிப்பு

புதுதில்லி:
இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சிக்கலில் நடுவண் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா பதவி விலகமாட்டார் என்று முதலமைச்சர் கலைஞர் கூறியிருக்கிறார்.

நடுவண் திட்டக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் கலைஞர் 2 நாள் பயணமாக காலை தில்லி வந்தார்.

தில்லி வானூர்தி நிலையத்தில் அவருக்கு நடுவண் அமைச்சர்கள் மு.க. அழகிரி,. ஆ.இராசா, து.நெப்போலியன், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்த கலைஞர், அடுத்த மாதம் 23ஆம் தேதி முதல் கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி, மாநாட்டில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மகள் கனிமொழி, தலைமைச் செயலாளர் சிறீபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு நிச்சயமாக வருவதாக குடியரசு தலைவர் உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஆ. இராசா மீது ஏராளமான குற்றச்சாற்றுகளை சுமத்தி அவர் பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது பற்றியும், இதை ஏற்று அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா? அல்லது நீடிப்பாரா? என்றும் செய்தியாளர்கள் வினா எழுப்பினர். ஆனால், அதற்கு விடையளித்த முதலமைச்சர் கலைஞர், “உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டுவரவில்லைஎன்று கூறி நடுவண் அமைச்சர் இராசா பதவி விலக மாட்டார் என்று மறைமுகமாக செய்தியாளர்களுக்கு உணர்த்தினார்.

முதலமைச்சர் கலைஞரின் புதல்வரும், நடுவண் அமைச்சருமான மு.க. அழகிரி, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமார் விடுத்த அழைப்பையும் அவர் நிராகரித்துவிட்டார் என்று கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இந்த விவரங்களையெல்லாம் நீங்கள் மு.க. அழகிரியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் விடாப்பிடியாக, “கட்சித் தலைவர் என்ற வகையில் மு.க. அழகிரியிடம் நீங்கள் விசாரிக்கலாமே?” என்று கேட்டனர். அதற்கு விடையளித்த கலைஞர், அப்படி விசாரித்தால் அதுபற்றி உங்களுக்குத் தெரியவருமே” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது குறித்த வினாவிற்கு விடையளித்த கலைஞர்,
“இந்தியா முழுவதுமே மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதுபற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் மின்வெட்டு அவ்வளவாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார். மின்பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? என்று கேட்டபோது, தாம் அளித்துள்ள அறிக்கையே வெள்ளை அறிக்கை போன்றதுதான் எனக் கலைஞர் தெரிவித்தார்.

2ஆவது நாளாக திங்கட்கிழமையும் தில்லியில் தங்கியிருக்கும் முதலமைச்சர் கலைஞர் காலை நடுவண் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டெக்சிங் அலுவாலியாவைச் சந்தித்து தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்த உள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமருடனான சந்திப்பின்போது, சேலம் இரும்பு ஆலைக்காக நிலம் அளித்தோரின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது தொடர்பாக வலியுறுத்த இருப்பதாக கலைஞர் கூறினார்.

மான்டெக்சிங் அலுவாலியவுடனான சந்திப்பின்போது திட்டக்குழுவில் தமிழத்தின் ஒதுக்கீட்டாக எவ்வளவு தொகை கேட்கப்பட்டது? எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது? என்னென் திட்டங்களுக்காக நிதியை ஒதுக்கக் கோரினோம்? என்னென்ன திட்டங்களுக்காக நிதி உதவி கோரினோம் என்பது பற்றியெல்லாம் சந்திப்பு முடிந்த பிறகு நானே உங்களைச் சந்தித்து தெரிவிப்பேன் என்று முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more...

Monday, June 29, 2009

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சலுகை கிடைக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர் ஆ.இராசா பேட்டி


நீலகிரி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆ.இராசா பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, ”தமிழக முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான இளம்பெண்களுக்கான திருமண உதவித்தொகை திட்டம், மகப்பேற்று காலத்தில் முன்பும் பின்பும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகள் நீலகிரி தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்கூலியாக ரூ.100 முதல் ரூ.120 வரை பெறுவதால் அவர்களது மாத ஊதியம் ரூ.3 ஆயிரத்தை கடந்து, ஆண்டு வருமானம் அதிகரித்துவிடுகிறது. இதனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வராத நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை எதுவும் கிடைப்பதில்லை. மற்ற மாவட்டங்களில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் என்று கூறி அரசு திட்டங்களை பெறுகிறார்கள். நாகர்கோயிலை சேர்ந்த ரப்பர் தொழிலாளர்களுக்கும் இதே நிலை உள்ளது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த பிறகு ஆய்வு செய்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பயனடைய வழிவகை செய்ய முடியும். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேச இருக்கிறேன்’’ என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.

இந்த நேர்காணலின்போது மாவட்டச் செயலாளர் துரைசாமி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாடாலூர் சோமு, ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜேந்திரன், தங்கராசு, வேப்பூர் வெங்கடாசலம், நகரச் செயலாளர் இராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் முகமதுபாரி, நடராஜன், கரிகாலன், காட்டுராசா, ஊராட்சித் தலைவர்கள் சரவணமூர்த்தி, இரவிச்சந்திரன், கலையரசன், சாந்தாதேவி குமார், குமார், நகராட்சித்தலைவர் இளையராஜா, நகரமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கருணாநிதி, ஜெயக்குமார், மாரிக்கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார் கணினி மையத்தை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ,இராசா திறந்து வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார் மற்றும் நிறுவன உரிமையாளர் அரிபாஸ்கர் கலந்துகொண்டனர்.

Read more...

Friday, June 26, 2009

"வணங்கா மண்" பொருட்களை இலங்கை ஏற்றது எப்படி? அமைச்சர் ஆ.இராசா நேர்காணல்: வீடியோ

தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் முயற்சியால் "வணங்க மண்" பொருட்களை இலங்கை அரசு வணங்கி ஏற்றது பற்றி அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல் வீடியோ இது.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO