#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, June 30, 2009

வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வர ஒத்துழையுங்கள்: மத்திய அமைச்சர் ஆ.இராசா பேச்சு


ஜெயங்கொண்டம் பகுதியில் வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வரவேண்டும். அதனால் மின்திட்டம் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரியலூர் மாவட்டத் தி.மு.க. சார்பில் முதல்வர் கலைஞரின் 86-வது பிறந்தநாள் விழா, ஸ்டாலினை துணை முதல்வராக்கியதற்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் தனசேகர் தலைமை ஏற்றார். மாவட்ட அவைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் முத்துக்குமரசாமி, பொன்பக்கிரி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். நகரச் செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், மத்திய தகவல் தொலைதொடர்பு மற்றும் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ”அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மின்திட்டம் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். இதற்காக சார்பு நீதிமன்றங்கள் உத்தரவிடும் தொகை எவ்வளவாக இருந்தாலும், அத்தொகையை இந்த அரசு உரியவர்களுக்கு வழங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.10 இலட்சம் கொடுக்க சொன்னாலும் கொடுக்கப்படும். அந்தத் தீர்ப்பை மீறி அரசு மேல்முறையீடு செய்யாமல், மின்திட்டப் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயங்கொண்டம் பகுதியில் வறுமையை ஒழிக்க தொழிற்சாலைகள் வரவேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத் திருத்தக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுபாஷ் சந்திரசேகரன், மாநிலப் பேச்சாளர் பெருநற்கிள்ளி, நகர்மன்றத் தலைவர் லதாகணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

Monday, June 29, 2009

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு சலுகை கிடைக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர் ஆ.இராசா பேட்டி


நீலகிரி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆ.இராசா பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, ”தமிழக முதல்வர் கலைஞரால் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டமான இளம்பெண்களுக்கான திருமண உதவித்தொகை திட்டம், மகப்பேற்று காலத்தில் முன்பும் பின்பும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகள் நீலகிரி தோட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்கூலியாக ரூ.100 முதல் ரூ.120 வரை பெறுவதால் அவர்களது மாத ஊதியம் ரூ.3 ஆயிரத்தை கடந்து, ஆண்டு வருமானம் அதிகரித்துவிடுகிறது. இதனால், வறுமைக்கோட்டுக்கு கீழ் வராத நிலையில் அவர்களுக்கு உதவித்தொகை எதுவும் கிடைப்பதில்லை. மற்ற மாவட்டங்களில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கூட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் என்று கூறி அரசு திட்டங்களை பெறுகிறார்கள். நாகர்கோயிலை சேர்ந்த ரப்பர் தொழிலாளர்களுக்கும் இதே நிலை உள்ளது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த பிறகு ஆய்வு செய்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் பயனடைய வழிவகை செய்ய முடியும். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேச இருக்கிறேன்’’ என்று மத்திய அமைச்சர் ராசா கூறினார்.

இந்த நேர்காணலின்போது மாவட்டச் செயலாளர் துரைசாமி, பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாடாலூர் சோமு, ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜேந்திரன், தங்கராசு, வேப்பூர் வெங்கடாசலம், நகரச் செயலாளர் இராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் முகமதுபாரி, நடராஜன், கரிகாலன், காட்டுராசா, ஊராட்சித் தலைவர்கள் சரவணமூர்த்தி, இரவிச்சந்திரன், கலையரசன், சாந்தாதேவி குமார், குமார், நகராட்சித்தலைவர் இளையராஜா, நகரமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கருணாநிதி, ஜெயக்குமார், மாரிக்கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார் கணினி மையத்தை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ,இராசா திறந்து வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ம.இராஜ்குமார் மற்றும் நிறுவன உரிமையாளர் அரிபாஸ்கர் கலந்துகொண்டனர்.

Read more...

Friday, June 26, 2009

"வணங்கா மண்" பொருட்களை இலங்கை ஏற்றது எப்படி? அமைச்சர் ஆ.இராசா நேர்காணல்: வீடியோ

தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் முயற்சியால் "வணங்க மண்" பொருட்களை இலங்கை அரசு வணங்கி ஏற்றது பற்றி அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணல் வீடியோ இது.

Read more...

Thursday, June 25, 2009

தமிழக முதல்வர் கலைஞர் சார்பில் அமைச்சர் ஆ.இராசா பேச்சு: 'வணங்காமண்' ஏற்பு

தமிழ்நாட்டில் சென்னை அருகே நிலைகொண்டுள்ள ”வணங்காமண்” கப்பலில் உள்ள நிவாரணப்பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேசுமாறு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஆ.இராசா வலியுறுத்தினார். இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருட்டிணா, கோத்தபயா, பசில் ஆகியோருடன் பேசியதால், இன்னும் சில நாட்களில் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வழங்குவதற்காக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அளித்த கொடை மூலம் 884 மெட்ரிக் டன் எடை கொண்ட உணவுப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களையும் சுமந்து கொழும்பு நோக்கி சென்றது வணங்காமண் என்ற பெயரிடப்பட்ட கேப்டன் அலி கப்பல். அக்கப்பல் கொழும்பை அடைந்தபோது இலங்கைக் கப்பற்படை நான்கு நாட்கள் சோதனையிட்டு, உணவு மற்றும் மருந்து பொருட்கள் மட்டுமே உள்ளதாக அறிக்கையையும் வெளியிட்டது. பின்னர் இலங்கை அரசு சில காரணங்களை கூறி பொருட்களை இறக்க தடை விதித்து கப்பலையும் வெளியேறுமாறு கட்டளையிட்டது.

இதையடுத்து சென்னை கடல் பகுதியை நோக்கி கடந்த 12-ஆம் தேதி வணங்காமண் கப்பல் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை வன்னி மக்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு தமிழக முதல்வர் கலைஞர் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எடுத்து தில்லிக்கு சென்று, கிருஷ்ணாவை சந்தித்து கொடுத்தார். கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சரும் சாதகமான பதில் கிடைக்க செய்வேன் என உறுதியளித்திருந்தார்.

ஆனால், வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியது எனக் கூறிய இந்திய கப்பற்படை அதிகாரிகள், கப்பலை சில கடல் மைல் கப்பலை நகர்த்தி வைக்க கட்டளை பிறப்பித்தனர். கப்பலில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தோடு பணியாளர் சிலருக்கு உடல் நலக்குறைவும் எற்பட்டது. இதனை அறிந்த தமிழக முதல்வர் கலைஞர் வணங்காமண் கப்பலுக்கு தண்ணீர் அனுப்ப ஆணையிட்டார். அதனை ஏற்று அதிகாரிகள் தண்ணீர் அனுப்பினர்.
இந்நிலையில் 24-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சவின் இரண்டு சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இலங்கையின் மேல் மட்ட அதிகாரிகளுடன் வணங்காமண் குறித்து கலந்துரையாடப்படும் என கிருஷ்ணாவை அறிவித்தார்.

இதனை அறிந்த தமிழக முதல்வர் கலைஞர், அமைச்சர் ஆ.இராசாவை தொடர்புகொண்டு, அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழக அரசு சாபில் பேசுமாறு கூறினார். கலைஞரின் கட்டளைபடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்ற அமைச்சர் .இராசா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து வணங்காமண் திரும்பவும் வன்னி மக்களுக்கு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கலைஞர் கூறியதாக வலியுறுத்தினர்.

இதையடுத்து, இரு நாட்டு அதிகாரிகள் குழு கலந்துகொண்ட கூட்டத்தில் வணங்காமண் கப்பல் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு சேர்ப்பது குறித்து இந்தய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு இலங்கை அதிகாரிகள் குழு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உடனடியாக சம்மதம் தெரிவித்தது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆ.இராசா, ”தி.மு.க. தலைவர் கலைஞர், ஈழமக்களின் நலனுக்காக தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரின் வலியுறுத்ததால் , இலங்கை அதிகாரிகள் குழுவிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த அழுத்தம் காரணமாக நிவாரண கப்பலை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுமதிக்க இலங்கை அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்துவார்” என்றார்.

Read more...

Monday, June 22, 2009

பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் 75 -ஆவது பிறந்த நாள் விழாவில் நடுவண் அமைச்சர் ஆ.இராசா கலந்துகொண்டு பேசிய பேச்சு :

"......இந்த மேடைக்கு கலைஞர் அவர்கள் வந்த பொழுது 'பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த முதலமைச்சர் கலைஞர் அவர்களே' என்று சொன்னார்கள்.தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய அடையாளம் இருக்கின்றது.பெரியாரைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அருள்கூர்ந்து யாரும் என்னைக் கருதக்கூடாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் பெரியார். பெரியார் நெஞ்சிலே தைத்தமுள்தான். அதை எடுத்தவர் கலைஞர். ஆனால், பெரியார் செய்யாத ஒன்றையும் தலைவர் கலைஞர் செய்திருக்கின்றார்.

வரலாற்று ஆசிரியர்கள் யாராவது இங்கு இருந்தால் வரலாற்றை செய்யக்கூடிய மாணவர்கள் யாராவது இந்த இருபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருக்கிற மேடையைக் குறித்துக்கொண்டு அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்................

இந்த மண்ணில் பார்ப்பனஜாதியும், பறப்பள்ளுஜாதியும் ஒழித்துவிட்டு எல்லோரும் ஒரே ஒரு ஜாதி என்று சொல்லுகின்ற இந்த முயற்சிக்குப் பெயர் தேசத்துரோகிதான் என்றால், நான் சசகும்வரை தேசத்துரோகியாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டவர் பெரியார்.ஆனால்,அந்த பெரியார் பார்ப்பனஜாதியும் பறப்பள்ளுஜாதியும் ஒழிக்கப்படவேண்டும் என்கின்ற நான் உயர்வாக மதிக்கிற அய்யா அவர்களுக்கு தோன்றாத யோசனை பூகோளப்பரப்பில் உள்ள ஜாதிகளை எல்லாம் ஒன்றுபடுத்தி,ஒரே இடத்தில் என்னுடைய காலத்திலாவது நான் அய்யா அவர்களுக்கு செய்யப்போகின்ற கடமை பூகோளத்தில் ஒன்றாக ஆக்கி, ஒரே இடத்தில் 100 வீடுகளைக் கட்டி அந்த 100வீட்டில் பிராமணனும் வாழ்வான்,வன்னியனும் வாழ்வான், ஆதிதிராவிடனும் வாழ்வான், முக்குலத்தோனும் வாழ்வான் என்று ஒருபுரட்சியை செய்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய மகத்தான தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை சொல்ல பெருமைப்படுகிறேன்".

(நன்றி :"விடுதலை". நிகழ்வு நாள்: 2-12-2007)

Read more...

மண்ணையும் நம்மையும் விழிக்க செய்த மகத்தான தலைவர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அன்னிமங்கலம் கிராமத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ. இராசா உரை:

மண்ணையும் நம்மையும் விழிக்க செய்த மகத்தான தலைவர் பெரியார். தமிழ்நாட்டில் பெரியார் படமில்லாமல் எவனும் இனி கட்சி தொடங்க முடியாது. உலகில் பல புரட்சிக்காரர்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் படிப்பறிவில்லாத பிற்போக்கத்தனமான தான் அடிமையாயிருப்பதையே அறியாத நாட்டில் புரட்சி செய்தவர் தந்தை பெரியார். தீண்டாமை, பார்க்காமை கொடுமைகள் நிறைந்த சமுதாயத்தை மாற்றிக் காட்டிட தன் வாழ்நாட்களை திக்குச்சியாக மாற்றிக் கொண்ட பெரியாரின் பணிகளை கடைக் கோடி மக்களுக்கும் கொண்டு செல்வோம்.
(5.10.2008 ஞாயிறு மாலை 6 மணியளவில் - நன்றி:"விடுதலை" )

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO