#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }
Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Friday, November 12, 2010

(வீடியோ) பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: ஆ.ராசா பேட்டி

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த காட்சிகள்:

Read more...

Sunday, September 19, 2010

வீடியோ காட்சி : ”இலவச செல்போன் திட்டம்”

கோவை மாவட்டம் அவினாசி அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில், பி.எஸ்.என்.எல். சார்பில் “வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டம்” தொடக்க விழா 18ஆம் தேதி நடைபெற்றது. இத்திட்டத்தை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தொடக்கிவைத்து, பயனாளிகளுக்கு இலவச செல்போன்களை வழங்கி உரையாற்றினார்.

அந்த விழாவின் விடியோ காட்சிகளை காண தருகிறோம்







Read more...

Sunday, September 12, 2010

(வீடியோ) ஊட்டியில் ரோப் கார் அமைக்க அமைச்சர் ஆ.ராசா ஆய்வு


நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ரோப் கார் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா சனிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் உதகை படகு இல்லத்தில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரோப் கார் அமைக்க நீலகிரியில் 9 இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.




Read more...

Thursday, October 01, 2009

கலைஞருக்கு அண்ணா விருது வழங்கியது தகுமா? : அமைச்சர் ஆ.இராசா விளக்கம்

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தி.மு.க. அறக்கட்டளை சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது. கலைஞர் அண்ணா விருது பெற காரணமாக இருப்பது எது? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

முதலமைச்சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி முன்னிலையிலும் கவிஞர் வாலி தலைமையிலும் நடந்த இக்கருத்தரங்கில், சுப.வீரபாண்டியன், நடுவண் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜெகத்ரட்சகன், நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் தென்னவன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இந்தக் கருத்தரங்கில் ”கலைஞர், அண்ணா விருது பெற காரணமாக இருப்பது பகுத்தறிவுக் கொள்கையே” என்று வாதிட்ட அமைச்சர் ஆ.இராசாவின் உரை அடங்கிய காணொலியை வெளியிடுகிறோம்.


Read more...

Friday, July 31, 2009

ஊட்டியில் கடும் மழை; மக்களை சந்தித்தார் அமைச்சர் ஆ.இராசா

நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை அமைச்சர் ஆ.இராசா சந்தித்து நல உதவி பொருட்களை வழங்கினார்.



உதகையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேரம்பாடி, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை நடுவண் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சந்தித்தார். அங்கு தங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கம்பளி ஆகிய நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆ.இராசா, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ நீலகிரி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நானும் மாநில கதர் துறை அமைச்சர் இராமச்சந்திரனும் மாவட்ட ஆட்சியரோடு கலந்து பேசிவிட்டு சந்தித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, கம்பளி, பணம் ஆகியவை வழங்கினோம். பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO