#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, December 20, 2010

முன் ஜாமீன் வாங்க மாட்டேன்: ஆ.ராசா பேட்டி

சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் பெறப்போவதில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா கூறியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய அரசில் தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பக் துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இந்நிலையில், உடல் நலக்குறை காரணமாக உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த ஆ.ராசா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சட்டம் பயின்றுள்ள நான் எந்தவொரு சட்ட விதிமுறைகளையும் புறக்கணிக்க மாட்டேன் என்றும், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை என்றும் கூறினார்.

செய்தியாளர்கள் வீணாக குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆ.ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்தார்.
==================================================

சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார்: கலைஞர்
...............................................................................................................

சென்னையில் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது என்றும், இந்தக் கூட்டணியை யாரும் கலைக்க நினைத்தாலும் முடியாது என்றும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது வழக்கமானதுதான் என்றும், சி.பி.ஐ. முன் ஆ.ராசா விளக்கமளிப்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

1 comments:

சாந்திபாபு January 2, 2011 at 3:02 PM  

"2ஜி ஸ்பெக்ட்ரமில் ஏலமுறைக்குப் பதில் ஒதுக்கீட்டு முறை என்பது வெறும் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதல்ல. அலைக்கற்றைகளின் அடர்த்தியையும் பயன்பாட்டையும் அதி கரிப்பதற்காகத்தான் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. ட்ராய் நிறுவனத்தின் பரிந்துரைகளின்படிதான் இது செயல்படுத் தப்பட்டது. இதன்விளைவாக, பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணம் குறைந்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைப்பது இந்தியா வில்தான். இதனால் 1லட்சத்து 40கோடிக்கும் அதிகமான இழப்பு என்று சொல்வது தவறான கணக்கீடு.

  ©Template by Dicas Blogger.

TOPO