#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Sunday, March 21, 2010

ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும்: அமைச்சர் ஆ.ராசா

கோவை:
ஜெயலலிதாவுக்கு இருந்த இடத்தில் அறிக்கை விடுவதும், கடிதம் எழுதுவதும்தான் வேலை. என்னை பதவி நீக்க கேட்பதை தவிர ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும் என்று அமைச்சர் ஆ.இராசா தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

கோவைக்கு மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா வந்திருந்தார். அவரிடம் ஜெயலலிதாவின் கடிதம் செய்தியாளர்கள் கேட்டதற்கு விடையளித்த அமைச்சர் ஆ.ராசா , ’’ஜெயலலிதாவுக்கு இருந்த இடத்தில் அறிக்கை விடுவதும், கடிதம் எழுதுவதும்தான் வேலை. என்னை பதவி நீக்க கேட்பதை தவிர ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆ.இராசா, தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். பிரதமருக்கும் இது தெரியும். சட்டம், விதிமுறைகள் குறித்து தெரியாதவர்கள் பேசுவதற்கு என்ன சொல்ல முடியும்’’என்றும் கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO