பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா, நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் து.நெப்போலியன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மா.விஜயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ..................................................................................................................................
புதிய வங்கிக் கிளை திறப்பு
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் புதிய வங்கி கிளையை நடுவண் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.
இராசா திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில்,
நடுவண் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை அமைச்சர் து.
நெப்போலியன்,
மாவட்ட ஆட்சியர் மா.
விஜயக்குமார்,
சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார்,
மண்டல மேலாளர் வதராசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.............................................................................................................
நோயர் குணமடைய அமைச்சர் வாழ்த்து
பெரம்பலூர் அற்புதா மருத்துவமனைவில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை நடுவண் அமைச்சர்கள் ஆ.இராசா, து.நெப்போலியன் ஆகியோர் சந்தித்து, முதல்வர் கலைஞர் அவர்களின் வாழ்த்து கடிதத்தை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் மா.விஜயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் இராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Post a Comment