தி.மு.க. ஒரு சமுதாய இயக்கம்: கலைஞர்
திராவிட முன்னேற்ற கழகம் என்பது ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய இயக்கம் என்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார்.
"டைடல் பார்க்' கை திறந்து வைப்பதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான தொண்டர்கள் மேளம் கொட்டினார்கள்.
பிறகு மாலை 6.00 மணிக்கு கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த தி.மு.க.,வின் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. நாம் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர் பொன்முடி, தி.மு.க.வில் அண்மையில் இணைந்த முத்துசாமி, சின்னசாமி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

விழாவி்ல் பேசிய முதல்வர் கலைஞர், அரசியல் ஆனாலும், கலைத்துறையானாலும் என்னை வளர்த்தது கோவை என்று குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் அரசு விழாக்கள் எங்கு நடந்தாலும் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்றும், தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகள் தமிழில் பேச பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment