#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Tuesday, November 02, 2010

ஈழுவாதியா மக்களுக்கு ஜாதிசான்றுகள் கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் ஆ.இராசா உறுதி

ஊட்டி:
ஈழுவாதியா மக்களுக்கு ஜாதிசான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலையாள மொழி பேசும் கேரள மக்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் ‘கேரளியம் 2010’ விழா ஊட்டி அண்ணா கலையரங்கில் நடந்தது. விழா குழு தலைவர் கிரியன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், முஸ்தபா, நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஆ.இராசா, நீலகிரி மாவட்டத்தில் சாதி, இனம் வேறுபாடுகள் இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கலாசாரத்தால் வேறுபட்ட மக்கள் இருந்த போதிலும் உணர்வால் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். நீலகிரி மாவட்ட மக்களிடையே ஏற்று தாழ்வு இல்லை என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஈழுவாதியா இனத்தை சேர்ந்த மக்களுக்கு ஜாதிச்சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஈழுவாதியா இனத்தை சேர்ப்பது குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தான் முடிவு செய்ய முடியும். ஒரு சாதியை சேர்ந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சாதிச்சான்று வழங்க வேண்டும் எனில் கல்வி, பொருளாதாரம் கொண்டே வழங்க முடியும். ஈழுவாதியா மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க பாடுபடுவேன். தமிழக முதலமைச்சரும் சாதிச் சான்று வழங்க பரிந்துரை செய்வார். கட்டாயமாக சாதிச்சான்று கிடைக்கும் என்றும் அமைச்சர் ஆ.இராசா தெரிவித்தார்.

விழாவில் கேரள மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO