#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Friday, November 12, 2010

ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை: ஆ.ராசா

தொலைத்தொடர்புத்துறை கொள்கை வழிகாட்டுதல் படியே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்டதால், பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட போது 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை வழிகாட்டுதல்களை கடை பிடித்தோம். சட்டத்தின்படி தான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது. சட்டத்துக்கு உட்பட்டே இதில் நான் பணியாற்றி உள்ளேன். அதை நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்போம், நிரூப்பிபோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி சொல்வதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் தகுதியும் கிடையாது. ஏனெனில் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுக்கள் உள்ளன. ஜெயலலிதா தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்படி கூறி வருகிறார். இந்தியாவிலேயே தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளை 10,12 ஆண்டுகளாக இழுத் தடித்து வரும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். எனவே என்னை பதவியில் இருந்து நீக்க சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் என்ன சொல்லியுள்ளது என்று எனக்கு தெரியாது. அந்த அறிக்கை இன்னும் என் கைக்கு வரவில்லை. அந்த அறிக்கையை பார்த்த பிறகு கருத்துக்களை சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

0 comments:

  ©Template by Dicas Blogger.

TOPO