#navbar-iframe { height: 0px; visibility: hidden; display: none; }

Monday, November 29, 2010

ஆ.ராசா எம்.பிக்கு தொகுதி மக்களின் உற்சாக வரவேற்பு

ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசையை அமைச்சர் ஆ.ராசா, குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததால் செல்போன் மற்றும் தொலைப்பேசி கட்டணம் மிக கணிசமாக குறைந்தது. இதனால், ஆத்திரமடைந்த சில அதிகார நிறுவன தொழிலதிபர்களின் தூண்டுதலின் பேரில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூக்குரலிட்டனர். அந்த ஆவேசப் பழித் தூற்றலுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஜனநாயக நடைமுறைகள் சுமூகமாக நடைபெறுவதற்காக அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா விலகினார்.


பதவி விலகிய பின் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வந்த ஆ.ராசா எம்.பியை, தமிழக கதர் துறை அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், கோவை மாநகர தி.மு.க., செயலர் வீரகோபால், முன்னாள் எம்.பி., ராமநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நீலகிரி மாவட்ட கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், பெரியார் இளைஞர் நற்பணி மன்றம், ஆதிதமிழர் பேரவை, அவினாசி – அத்திக்கடவு நிலத்தடிநீர் பிடிப்பு திட்டக் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, முத்திரையர் சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், அமைப்புச்சாரா தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், ஆதிவாசிகள் கூட்டமைப்பு, தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

மேலும் கோவையிலிருந்து உதகை வரை ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொட்டும் மழையில் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். பின், அவர் ஊட்டி புறப்பட்டு சென்றார்.

1 comments:

சாந்திபாபு January 2, 2011 at 2:54 PM  

நீங்கள் என்றுமே எங்கள் ராசாதான் ,

எந்த விதத்திலும் அரசின் விதி முறைகளை மீறலைங்கிறதுதான் சாராம்சம்.''

மத்திய மந்திரி ராஜாவைப் பொறுத்தவரை, அவர் குற்றவாளி அல்ல. பிரமோத் மகாஜன் மந்திரியாக இருந்தபோதும்; அருண் ஷோரி மந்திரியாக இருந்தபோதும், டெண்டர் விடப்படவில்லை; அவர்கள் எந்த முறையைப் பின்பற்றினார்களோ - தொடர்ந்து அதே முறைதான் 2ஜி ஸ்பெக்ட்ரத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. முதலில் வந்தவருக்கு முதலில் என்ற முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டிருக்கிறது. யாருக்கும் தவறாக கொடுத்து விடவில்லை.

படித்தவர்களே ஏன் புரிந்துகொள்ள வில்லை

என்பதுதான் எனக்கு புரியவில்லை .

  ©Template by Dicas Blogger.

TOPO